தீர்த்த கரையினிலே

தீர்த்த கரையினிலே

காலை சரியாக ஆறு மணி. காலிங் பெல் அலற, நல்ல தூக்கத்தில் இருந்த மீரா அலறி அடித்து எழுந்தாள்.
வாசல் கதவை திறந்த மீரா" நீங்க தானா"
" குட் மார்னிங் டார்லிங்"
" எதுக்கு காலிங் பெல் அடிசீங்க"
" ஏன், டார்லிங்"
" இல்ல, எப்பவும் செல்ல ( cell phone) தானே கூப்புடுவீங்க"
" தெரியில, இன்னைக்கு என்னமோ தோனல, ஏன் எனி ப்பராப்ளம்"
" மொதல்ல அந்த காலிங் பெல்லை மாத்துங்க"
" எதுக்கு"
" அது காலிங் பெல் இல்ல, கோயில் மணி"
" அவ்வளவு சவுண்டா"
" காதை கிழிக்குது"
" சரி, மாத்திட்டா போச்சு டார்லிங்"
பேசிக்கொண்டே வந்த இருவரும் பெட் ரூம் அடைந்து, கதவை சாத்தினர்.
" என்னங்க இது, காலையிலேவா, யூ ஆர் வெரி நாட்டி"
" இந்த விஷயத்துக்கு நேரம், காலம் ஏதாவது இருக்கா.. என்ன.."
" போங்க, நீங்க ரொம்ப மோசம்"
" அப்படியா, அப்படியே இருக்கட்டும்"
" என்ன காலையிலேயே இவ்வளவு குஷியா இருக்கீங்க"
" மும்பைய் டிரிப், கிராண்ட் சக்ஸஸ், ஒரு கோடி பிஸ்னஸ், சும்மாவா"
" சரி  மும்பையிலிருந்து எனக்கு என்ன வாங்கி வந்தீங்க"
" அது சஸ்பன்ஸ்"
" ஐய்யோ எனக்கு மண்டையே வெடிச்சுருமே"
" டன் மினிட்ஸ் வெயிட் பண்ண மாட்டியா"
" இப்படி சஸ்பன்ஸ் வைக்கறீங்களே டார்லிங்"
" மீரா....எப்படி நீ நாற்பது வயதிலும் இவ்வளவு அழகா இருக்க"
" நிஜம்மாவா"
" எஸ், யூ நோ,  யூ ஆர் சோ  பியூட்டிஃபுல், "
" போங்க எனக்கு வெட்கமா இருக்கு"
" நீ வெட்கபடும் போது ஜஸ்ட் சிக்ஸ்டீன் இயர்ஸ் கேர்ள் ஆயிடர"
" ரியலி"
" எஸ், மீரா, ஜஸ்ட் ஐ லவ் யூ"
தம்பதிகள் தன்னை மறந்தனர். அந்தரங்க உலகில் நுழைந்தனர்.


"தோ பார் அந்த சூட் கேஸ் புல்லா உனக்கான டிரஸ்"
" அது சரி, எனக்கான ஸ்பெஷல் கிப்ட்"
" கண்ணை மூடு"
" ரொம்பவே சஸ்பன்ஸ்"
" அப்படியே கண்ணை மூடியபடியே, கண்ணாடி முன் நில்லு"
" என்னங்க அப்படி  ஒரு ஸ்பெஷல்"
" அப்படியே கண்ணை மூடியபடி இரு, கண்ணை தொறக்க கூடாது"
" ஓ.கே... ஓ.கே.. ரொம்ப பில்டப் பன்றீங்களே டார்லிங்"
" கண்ணை மூடிட்டு தானே இருக்க"
" ஆமாம்ப்பா ஆமாம், கண்ணை மூடிட்டு தான் இருக்கேன்"
" தட்ஸ் குட் ஒன்...டூ... த்ரீ... ஃபோர்..., கம்மான் இப்ப கண்ணை திற"
கண்ணாடியில் , அவளை பார்ததும் , ஆனந்தத்தின் உச்சம் அடைந்தாள்.
" நான், எதிர் பார்காகவே இல்ல, இப்படி ஒரு காஸ்டிலி கிப்ட்"
" பணம் முக்கியமா, உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்"
" எப்படி இந்த ஐடியா உங்களுக்கு திடிர்னு வந்தது"
" திடிர்னு ஏற்படல, ரொம்ப நாளா, எனக்கு இந்த தாட் இருந்தது"
" எனக்கு இந்த வைர அட்டிகை நல்லா இருக்கா"
" உனக்கு என்ன நீ தேவதை"
" என்ன உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா"
" உன்னை மட்டும் தான் பிடிக்கும்"
" அப்ப, உங்க அம்மாவ"
' இப்படி எல்லாம் இந்த நேரத்துல கேள்வி கேட்கலாமா"
" ஏன் கேட்க கூடாதா"
" ரோமாண்ஸ் பண்ணும் போது, நம்மல பத்தி தான் பேசனும்"
" அப்படியா"
" அப்படியே தான், இரண்டாவது ரவண்டுக்கு ரெடியா"
" நீங்க ரெடியா"
" என்ன கேட்ட"
" நீங்க ரெடியா"
" ஹலோ, ஐம் ஆல் வேஸ் எயிட்டீன் இயர்ஸ் பாய்"
" விட மாட்டீங்க"
" உன்னை என் பிடியில் இருந்து விடவே மாட்டேன்"

மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்தை அடைந்தனர் தம்பதியினர்.


" ராமநாதா"
" சொலுங்கம்மா"
" காலையில இருந்து, வாமிட்டா இருக்கு, தலை சுற்றுது"
" நைட் என்ன சாப்பிட்டீங்க"
"  வழக்கமான டிபன் தான்"
" சரி ரெடியாகுங்க நம்ம ஃபேமிலி டாக்டர்கிட்ட போயிட்டு வருவோம்"

" நீங்க கொஞ்சம் வெளியில இருங்கம்மா" டாக்டர் கூறினார்.
" ராமநாதன் நான் இந்த விஷயத்துல உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல 99% கன்பார்ம் தான் அதாவது உங்க அம்மா  பிரக்னண்டா இருக்காங்க "
டாக்டர் அவ்வாறு சொல்ல ராமநாதன் அதிர்ச்சிக்கு உள்ளனான்.
" சார் நீங்க என்ன சொல்றீங்க இந்த வயசுல"
"  சாத்தியம் தான் ராமநாதன், உங்க அப்பா இறந்து எத்தனை மாசம் ஆகுது"
" இரண்டு மாசம் சார்"
"  உங்கப்பா இறக்கத்துக்கு முன்னாடி உங்க அம்மாகிட்ட செய்த சேட்டை இன்னைக்கு அவங்க இந்த நிலைமைக்குக் காரணம்"
" என்னால இது நம்பவே முடியல"
"  உங்க டவுட் கிளியர் பண்றதுக்கு எதுக்கும் பிளட் டெஸ்ட் எடுத்திடலாம்"
" உங்க அனுபவத்தல, எனக்கு டவுட் இல்லை, இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிட முடியுமா"
" நீங்க என்ன சொல்ல வரீங்க ராமநாதன்"
" கரு கலைக்க முடியாதா"
" அம் சாரி ராமநாதன், புரோபஷனல் எதிக்ஸ்னு  ஒன்னு இருக்கு, அதுக்கு நான் எந்த காலத்திலும் துரோகம் பண்ண மாட்டேன்"
"  அப்ப எங்க அம்மா இந்த குழந்தையை சுமக்க தான் வேணுமா"
" கண்டிப்பா ராமநாதன்"
" இத எங்க அம்மாகிட்ட சொல்லலாமா"
" அவங்க நம்மளோட அனுபவசாலி அவங்களுக்கு இந்நேரம் அவங்க உடம்ப பத்தி தெரிஞ்சு இருப்பாங்க"

சென்னை ஈசிஆர் ரோட்டில் வெகுதூரம் காரை ஓட்டிய ராமநாதன் மாயாஜால் அடுத்த ஒரு அமைதியான இடத்தில் ரோட்டின் ஓரமாக காரை நிறுத்தினான்.
தன் தாயாரை காரிலிருந்து இறக்கி அங்கே ஒரு சவுக்குத் தோப்பின்  நிழலில்
டர்க்கி டவல் தரையில் போட்டு அமரச் சொன்னான்.
" அம்மா நீ கர்ப்பமா இருக்க "
மிகவும் தயங்கியபடி சொன்னான் ராமநாதன்.
" தெரியும்"
"  இப்ப என்ன செய்யலாம்"
"  டாக்டர் என்ன சொல்றார் ராமு"
" உன்ன குழந்தை பெத்துக்க சொல்றார்"
" என் கருவை கலைக்க முடியாதாம்மா"
" அது சட்டப்படி குற்றமாம்"
"  இத மீரா கிட்ட எப்படி சொல்ல போற"
" அதான் எனக்கும் தெரியலம்மா"
" நான் அதோ தெரியுதே அந்த கடலில் விழுந்து செத்து விடவா"
"  ஏமா, அந்த மாதிரி எல்லாம் பேசுற, ஏதோ தெரியாம நடந்துருச்சு, அதை எப்படி சமாளிக்கணும், அதுக்கு எதனா யோசனை சொல்லு"
" எல்லாம் என்னால தான்"
" அம்மா நடக்கணும்னா,  எது வேணா நடக்கும்"
" மீரா கிட்ட இது மறைக்க முடியாதும்மா, உண்மைய சொல்லிவிடலாம்"



"  வாங்க, வாங்க... ,  உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்" மிகவும் சந்தோஷமாக இருந்தாள் மீரா.
" என்ன"
" ஒரு ஹேப்பி நியூஸ்"
"  என்ன மீரா "
" நம்ம பொண்ணு சௌந்தர்யா, மாப்பிள, சம்பந்தி ஸ்டேஸ் இருந்து அடுத்த வாரம் இங்க வராங்க, இன்னொரு ஹேப்பி நியூஸ் நம்ப சௌந்தர்யா ப்ரெக்னன்ட் இருக்கா"
" அப்படியா மீரா"
" என்னங்க எவ்வளவு பெரிய விஷயம் சொல்றேன் நீங்க கொஞ்சம் கூட சந்தோஷமா இல்லாம டல்லா பேசறீங்க"
" இல்ல அம்மா கூட ஹாஸ்பிடல் போயிட்டு வந்தேன் இல்ல லைட்டா தலை வலிக்குது ஒரு காபி கொண்டு வாயேன்"

இரவு.
ராமநாதன் மீராவை உற்றுப் பார்த்தான்.
" மீரா காலையில அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன் இல்லையா அத பத்தி நீ ஒரு வார்த்தை கூட கேக்கலையே"
" ஏன் அவங்க நாற்மலா ஆயிட்டாங்க இல்லை"
"  இல்ல, அது வந்து"
"  ஏன் அவங்க உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா"
" ஆமாம்"
"  என்னவாம், உங்கம்மா உடம்புக்கு"
" அது உன் கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல மீரா"
"  என்னங்க, என்னதான் உங்கம்மா பிரச்சனை"
" அம்மா பிரக்னண்டா இருக்காங்க"
" என்ன சொல்றீங்க"
" ஆமாம் நான் சொல்றது உண்மை"
" மை காட்! ஐம்பத்து நாலு வயசுல இது சாத்தியமா"
" எங்கம்மா விஷயத்துல சாத்தியம்"
" ஐயோ எனக்கு அருவருப்பா இருக்கு"
"  நீ என்ன.."
"  என்ன உங்க அம்மா விளையாடுறாங்களா,  அடுத்த வாரம் நம்ம பொண்ணு, மாப்பிள்ளை, சம்பந்தி எல்லாம் ஸ்டேட்ஸ்ல இருந்து வராங்க அந்த சமயத்துல இவங்க இந்த கோலத்துல இருந்தா எப்படி நான் அவங்க கிட்ட சமாளிக்கிறது. தீஸ் இஸ் ரெடிகுளஸ். திஸ் இஸ் மை பிரெஸ்டிஜ் இஸ்யூ. இதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. இவங்கள அவங்க வரும்போது நிச்சயமா நம்ம வீட்டில் இருந்து அப்புறப்படுத்தனும். இதெல்லாம் ரொம்ப ஓவர்.  ஐ காண்ட் டாலரேட் திஸ் கயிண்ட ஆப் நாண்சன்ஸ் , இதெல்லாம் என்னால நிச்சயமா ஏத்துக்க முடியாது. ரொம்ப விளையாட்டுத்தனமா இருக்கே,  பாட்டியும் பேத்தியும் ஒரே சமயத்துல புள்ளத்தாச்சியா! முடியாதுப்பா, முடியாது  கண்டிப்பா சம்பந்தி அவங்க இங்க வரும்போது நம்ம வீட்டுல உங்கம்மா இருக்க கூடாது. திட்டவட்டமா சொல்லிட்டேன்"  பொறிந்து தள்ளினாள் மீரா.
செய்வதறியாது துடித்தான் ராமநாதன்.
சென்னை அருகே உள்ள பல ஹோம்ங்களில் தன் அன்னையை சேர்க்க
திட்டமிட்டவனுக்கு தோல்வியே மிச்சம். தன் தாயின் இந்த உடல்நிலையில் யாரும் ஹோம்ங்களில் அனுமதி அளிக்க மறுத்தனர்.  கடைசியாக தன் பால்ய சிநேகிதன் கேசவனிடம் தன் அன்னையை பற்றி எடுத்துக் கூறினான்.
கேசவனும் இரண்டொரு நாளில் ராமநாதனை சந்திப்பதாக வாக்கு அளித்தான்.

" அவர் எல்லாம் என்கிட்ட சொன்னார் உங்களுக்கு கொஞ்சம் கூட மூளை இல்லையா,  இந்த வயசில இது தேவையா, கைய கால வச்சு சும்மா இருக்க மாட்டீங்களா. அடுத்த வாரம் இங்க உங்க பேத்தி, மாப்பிள்ளை, சம்பந்தி எல்லாம் அமெரிக்காவிலிருந்து நம்ம வீட்டுக்கு வராங்க, அப்போ நீங்க இந்த கோலத்தில ...இங்க நீங்க நிஜமா இருக்கக்கூடாது. புரியுதா...."
மாமியாரிடம் அதிகாரத் தோரணையில் மீரா பேசினாள்.
  இதைக் கேட்ட ராமநாதனின் தாயார் கூனிக்குறுகி கண்ணீர் வடித்தாள்.

அடுத்த நாள் காலை.
டைனிங் டேபிள் மேல் அந்த மடித்த பேப்பர் இருந்தது.
அன்பு ராமநாதனுக்கு,
உன் அம்மா எழுதுவது. என்னால் உனக்கு இனிமேல் எந்த தொந்தரவும் இருக்காது. எங்கோ போகிறேன். என்னை தயவுசெய்து தேடாதே. நீ, உன் குடும்பம், சந்தோஷமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு உன் அம்மா,
மீனாட்சி.

பதறிப்போன ராமநாதன் அக்கடிதத்தை மீராவிடம் காண்பித்தான். மீராவிடம் எந்த சலனமும் இல்லை மாறாக ராமநாதனின் அம்மா வீட்டை விட்டு சென்றது அவள் மனதிற்குள் மிகவும் சந்தோஷப்பட்டாள்.

"  எங்க போய் இருப்பாங்க எதாவது ஐடியா இருக்கா"
" தெரியில கேசவா"
" உங்க சொந்தகாரர் வீட்டுக்கு யார் வீட்டுக்காவது போய் இருப்பாங்களா"
" சான்சே இல்ல"
" அப்ப எங்க தான் போய் இருப்பாங்க"
"  அம்மா ஒருவேளை சூசைட் அட்டெம்ப்ட் செய்து இருப்பாங்களா"
" ச்சே பாசிட்டிவா தீங்க் பண்ணு ராமநாதன்"
"  அம்மா ரொம்ப அவசர பட்டுட்டாங்களா"
" அவங்க மனோநிலை, உங்க வீட்டு சூழ்நிலை, அவங்கள இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கு"
" போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாமா"
"  கண்டிப்பா கம்ப்ளைன்ட் கொடுத்தே ஆகணும்"
" கேசவா அம்மா தப்பான முடிவு எதுவும் எடுத்திருக்க மாட்டாங்க இல்ல"
"  தைரியமா இரு ராமநாதன் அவங்க நல்ல நிலைமையில் தான் இருப்பாங்க"

தன்னுடைய பெண் சௌந்தர்யா, மாப்பிள்ளை சம்பந்தி, அனைவரும் அமெரிக்காவிலிருந்து வந்தனர். மீரா அவர்களுடன் மிகவும் சந்தோசமாக காணப்பட்டாள். கருவுற்ற மகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டாள். ராமநாதனால்,  தன் வீட்டில் தினம், தினம் நடக்கும் குதூகலத்தில் மனதார கலந்து கொள்ள இயலவில்லை. பலசமயம் சௌந்தர்யாவும், மாப்பிள்ளையும், சம்பந்தி தன் அம்மாவை பற்றி விசாரிக்கும்போது அவர்கள் தன் தூரத்து உறவினர் வீட்டில் இருப்பதாக சமாளித்தான். போலீஸிடம் இருந்து  தன் அன்னையைப் பற்றி எந்த ஒரு நல்ல தகவலும் இல்லை.   ராமநாதனால் தன் அன்னையை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. ராமநாதன் தன் பள்ளிப்படிப்பை படிக்கும் பொழுது தன் தந்தையாரின் லாரி தொழில் மிகவும் நலிவடைய ஏறக்குறைய குடும்பம் வறுமையில் வாடியது. அப்பொழுது குடும்பத்தை காப்பாற்ற ராமநாதனின் தாய் மீனாட்சி நான்கு வீடு பத்து பாத்திரம் தேய்த்து ராமநாதனை படிக்க வைத்தாள் பின்னாளில் மீண்டும் தன் கடுமையான உழைப்பில் ராமநாதனின் தந்தை பல தொழில் புரிந்து தொழில்  அதிபர் ஆனார். தன் தாய், தன் வாழ்நாளில் அவனுக்காக எவ்வளவோ துயரத்தையும், தியாகத்தை செய்திருக்கிறாள். அதையெல்லாம் ராமநாதன் மறக்க முடியாமல் தவித்தான்.  தன் அன்னை உயிரோடுதான் இருக்கிறாளா? இல்லை இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டாளா, ஒன்றுமே புரியவில்லையே. கண்ணீர் விட்டு அழுதான்.

மாதங்கள் ஓடியது.  ராமநாதனின் செல்போன் அலறியது.
" சொல்லு கேசவா"
"ராமநாதா உங்கம்மாவ பாத்தேன்டா" "என்னடா சொல்ற"
"ஆமாண்டா"
" எப்போ, எங்க"
"நேத்து ஈவினிங் ட்ரிப்ளிகேன் பக்கத்துல" "உண்மையா தான் சொல்றியா"
" இந்த விஷயத்தை விளையாட
முடியுமா டா"
"இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியுமா உனக்கு"
" தெரியும், நீ உடனே மெரினா பீச் காந்தி சிலை பக்கத்துல வந்துரு, அவங்க எங்க இருக்காங்கன்னு நான் உனக்கு காமிக்கிறேன்"
பத்தே நிமிடத்தில் காரில் பறந்து சென்றான் ராமநாதன்.
கேசவன் காந்தி சிலை அருகே நின்றிருந்தான். காரில் ஏறிய கேசவன் அப்படியே காரை அயோத்திகுப்பம் கிட்ட நிறுத்து. காரில் இருந்து இறங்கியவர்கள் அயோத்திகுப்பம் உள்ளே சென்றார்கள். அந்த பிளாக் தான். கரெக்ட். இந்த வீடுதான். தைரியமாக கதவை தட்டினான் கேசவன்.  முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு நடுத்தர இளைஞன் கதவை திறக்க "உங்களுக்கு யார் வேனும்" என்று கேட்டான்.
" காமாட்சி அம்மா" கேசவன் சொன்னான்.
"நீங்க ரெண்டு பேரும் அவங்களுக்கு என்ன வேணும்"
" தோ இவர், காமாட்சி அம்மாவோட பையன், நான் அவரோட ஃப்ரெண்ட்" நிலமையை புரிந்துகொண்ட அந்த
மீனவ அன்பன், இவர்களை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னான்.
"வாங்க, இதோ பாருங்க உங்கம்மாவை". நீண்ட நாள் கழித்து தன் அன்னையை கண்ட ராமநாதன் கண்களில் கண்ணீர் ஆறென பெருகியது. அம்மா நிறைமாத கர்ப்பிணியாக கட்டிலில் அமர்ந்திருந்தாள். ராமநாதன் நேரே அன்னையின் கால்களை பற்றி" அம்மா என்ன மன்னிச்சிடு, என்ன மன்னிச்சிடுங்கம்மா " என்று குழந்தையைப் போல் கதறி அழுதான்.
அதை பார்த்த மீனவ நண்பன் கேசவனும் நிகழ்ந்து போனார்கள். மன்னிப்பு கேட்ட தன் பிள்ளையை தன் அருகே உட்கார சொல்லி சமாதானப்படுத்தினாள் மீனாட்சி அம்மாள்." தோழர் உங்க பேர் என்ன " கேசவன் மீனவன் நண்பனை பார்த்து கேட்டான். பதிலுக்கு மீனவ நண்பன் "கதிர்" என்றான். உங்களுக்கு ராமநாதன் ரொம்ப கடமை பட்டு இருக்கான். சரி "மீனாட்சி அம்மாவை, எப்படி இங்க வந்தாங்க" கேசவன் கேட்க, "காலையில நாங்க எப்பவும் போல மீன்பிடிக்க கடலிலே  இறங்க, இந்த அம்மா கடலை நோக்கி நடக்குது. நான் புரிஞ்சிக்கினேன். இந்த அம்மாவுக்கு ஏதோ பிரச்சனை, சூசைட் பண்ணிக்க தான் போகுதுன்னு தெரிஞ்சுகிட்டேன். உடனே அவங்கள குண்டு கட்டாக தூக்கி  என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். எனக்கு அப்பா, அம்மா கிடையாது. ஏறக்குறைய நான் ஒரு அனாதை மாதிரி தான். ஆனால் எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க. இவங்க முதல்ல அவங்களுடைய கதையை என்கிட்ட சொல்லல. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு அவங்கள நான் சமாதானமா பேசி கேட்கும் போதுதான் இந்த அம்மாவோட பிரச்சினையை என்கிட்ட சொன்னாங்க. அப்போ அவங்க கிட்ட நான் சொன்னது ஒரே ஒரு விஷயம்தான். இந்த உலகத்துல எது நடந்தாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். இப்போ இவங்க கர்ப்பமா ஆனதுக்கு ஒரு காரணம் நிச்சயமா இருக்கும். இல்லன்னா இந்த அம்மா இந்த வயசுல கர்ப்பமா ஆகி இருக்கமாட்டார்கள். பார்க்கலாம் எல்லாம் அந்த ஆண்டவன் செயல். கதிர் மிக உறுக்கமாக பேசினான். " எங்க அம்மாவை காப்பாத்தி, இவ்வளவு நாள் நல்லபடியா பார்த்துக் கொண்டதற்கு உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்" நாமநாதன் தழுதழுத்த குரலில் பேசினான்.  "அவங்க உங்களுக்கு மட்டும் அம்மா இல்ல, எனக்கும்தான். நாக்கு செத்துப் போயிருந்த எனக்கு  ருசியா ஏழு மாதமா எவ்வளவு நல்லா சமைத்து போடறாங்க தெரியுமா, நிஜமாகவே அவங்க கையால சாப்பிடுவதற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி நீங்க ரெண்டு பேரும் வந்த நோக்கம், இந்த அம்மாவை கூட்டிட்டு போக போறீங்களா" கதிர் கேட்டான். "இல்ல தோழர், நாங்க சொல்ற வரைக்கும் இவங்க இங்கேயே இருக்கட்டும்" நாமநாநன் பதில் அளித்தான். மனமில்லாமல் ராமநாதன் தன் அன்னையிடமிருந்து விடைபெற்று அந்த அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள், கட்டாக ஒரு தொகையை எடுத்து, கதிரிடம் கொடுத்தான் ராமநாதன். கதிர் அந்த பணத்தை வாங்க முதலில் மறுத்தான். கடைசியில் கேசவன் பலமுறை சமாதானம் சொல்லி அந்த பணத்தை கதிர் பெற்று கொள்ளும்படி செய்தான்.


மணி இரவு பதினொன்று.
" ஏங்க, எழுந்திருங்க"
" என்ன மீரா "
"சௌந்தர்யாவுக்கு இடுப்பு வலி வந்துடுச்சு"
"சீக்கரமா காரை எடுங்க, டாக்டர் விட்டுக்கு கூட்டிட்டு போகணும்" சௌந்தர்யாவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தார்கள்.
ஹாஸ்பிடல் வாசலில் காத்திருந்த நாமநாதனின் செல்போன் அலறியது. "சார் நான் கதிர் பேசுறேன், உங்க அம்மாவுக்கு இடுப்பு வலி வந்துடுச்சு. நம்ம குப்பத்திலேயே, ஒரு  நரஸ் அக்கா இருக்காங்க, அவங்க தான் இப்ப உங்க அம்மாவுக்கு பிரசவம் பாக்கறாங்க" பரபரப்புடன் சொன்னான் கதிர்.
" சரி பத்திரமா பாத்துக்கங்க கதிர். நான் வந்து சீக்கரமா பார்க்கிறேன்" .
"ஓகே,  சார்".

"கேசவா, நான் ராமநாதன் பேசுறேன், இங்க பாத்தியா ஒரு அதிசயத்தை" "என்னடா சொல்ற"
" எங்கம்மாவுக்கும் பிரசவ வலி, என் பொண்ணுக்கும் பிரசவ வலி."
"ரொம்ப ஆச்சரியமா இருக்கில்ல" "ஆமாண்டா, சரி அம்மாவை எந்த ஆஸ்பத்திரில சேர்த்து இருக்கான் கதிர்."
" அம்மாவை வீட்லேயே வச்சு பிரசவம் பார்க்கறதா கதிர் சொன்னான். சௌந்தர்யாவை எங்க வீட்டு பக்கத்துல இருக்குற என். கே. நர்சிங் ஹோம்ல சேர்த்து இருக்கோம்".
" நாமநாதா நீ இப்ப எங்க இருக்க"
" நான் செளந்தர்யா கூட தான் இருக்கேன்"
" சரி, நான் சீக்கரமா அங்க வரேன்".

விடியற்காலை டூட்டி டாக்டர் ராமநாதனிடம்
"ஐ அம் வெரி சாரி, எவ்வளவு ட்டிரை பண்ணியும், எங்களால ஃபேபிய காப்பாத்த முடியில, ஆனால் மதர் ஓகே. ஐயம் வெரி சாரி"
இதைக் கேட்ட ராமநாதன் துடிதுடித்துப் போனாள். மீராவுக்கு மயக்கமே வந்துவிட்டது.

ராமநாதன் செல்போன் அடித்தது.
"யார் பேசறது"
" கதிர் சார்"
" சொல்லு கதிர்"
" இங்க அம்மாவுக்கு ஆம்பள பையன் பொறந்திருக்கான் சார், நீங்க எப்போ இங்க வரிங்க"
" சீக்கிரமே வந்து பாக்கறேன்"
" ஓகே சார்"

ராமநாதனை காண வந்த கேசவன் விஷயம் அறிந்து சொகமுற்றான். மீராவுக்கு ஆறுதல் வார்த்தை கூறி தேற்றினான்.
ராமநாதனை தனியே அழைத்துச் சென்றான். இன்னும் சௌந்தர்யாவுக்கு விஷயம் தெரியாது இல்ல."
" அப்படித்தான் நினைக்கிறேன்"
" ராமநாதா, உங்கம்மாவுக்கு ஆம்பள குழந்தை பிறந்து இருக்கு"
" தெரியும், கொஞ்சம் முன்னாடி, கதிர் போன் பன்னான்"
" நான் ஒரு நல்ல யோசனை சொல்றேன்"
" என்ன"
" இதை உங்கிட்ட மட்டும் சொல்ல முடியாது, மீராவையும் கூப்பிடு"
இராமநாதன் மீராவை அழைத்தான்.
கேசவன் ஆரம்பித்தான்,
" மீரா, உங்க மாமியார் எங்கயும் போயிடல, இதே சென்னையில் தான் இருக்காங்க. என்ன ஒரு ஆச்சிரியம் பாரு, அவங்களுக்கும் கொஞ்சம் முன்னாடி பிரவவலி ஏற்பட்டு, சுகபிரசவமா ஒரு ஆம்பள குழந்தை பிறந்திருக்கு. செளந்தர்யா தன்னுடைய குழந்தை இறந்து தான் பிறந்ததுன்னு கேள்வி பட்டா அவ நிச்சயமா தாங்க மாட்டா, அதனால, உங்க மாமியாருக்கு பிறந்த குழந்தை தான் இனி செளந்தர்யாவின் குழந்தை. புரியுதா. செளந்தர்யா மயக்க தெளிஞ்சு தன் பெற்ற குழந்தை எங்கேன்னு கேட்டா, ஒரு சில காரணத்துக்காக, குழந்தைய "இங்குபேட்டரில்" வச்சுருக்காங்கன்னு நீ அவ கிட்ட சொல்லி சமாளிச்சிடு. நானும், நாமநாதனும் அதுகுள்ள உங்க மாமியார் கிட்ட மன்றாடி கேட்டு, குழந்தைய எடுத்துனு வந்திடுரோம்"
" சரி, ஹாஸ்பிடல் மேனேஜ்மண்ட், இதுக்கு ஒத்துக்குமா" ராமநாதன் கேட்க
" பிரைவேட் ஆஸ்பிடல் தானே, நீ சீப் டாக்டர் கிட்ட பேசு" கேசவன் சொன்னான்.

காலை ஆறு மணி. காரை அயோத்திகுப்பம் வெளியில் நிறுத்திவிட்டு ராமநாதன், கேசவன் கதிரின் வீட்டை அடைந்தார்கள். மீனாட்சி அம்மா குழந்தை பக்கத்தில் பலவீனமாக படுத்திருந்தாள். ராமநாதனை பார்த்தவுடன் எழுந்து உட்கார முயற்சித்தாள்.
கேசவன் நேரம் அதிகம் இல்லாததால், சௌந்தர்யாவுக்கு ஏற்பட்ட நிலைமையை மீனாட்சி அம்மாள் முன் போட்டுடைத்தான். மீனாட்சி அம்மாள் தன் பேத்தி சௌந்தர்யாவை நினைத்து மிகவும் வேதனை அடைந்தாள். கேசவன் ஆரம்பித்தான், "சௌந்தர்யாவுக்கு தனக்கு பிறந்த குழந்தை இறந்ததாக தெரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களுக்கு பிறந்த இந்த குழந்தையை நீங்க சௌந்தர்யா கிட்டே நிரந்தரமா கொடுத்திடனும். இதுக்கு நீங்க அவசியம் சம்மதிக்கனும்."  கதிர் நடப்பதை எல்லாம்  பார்த்து மிகவும் ஆச்சிரியம் அடைந்தான்.  தனக்கு பிறந்த குழந்தையை கையில் ஏந்திய மீனாட்சி அம்மாள் அந்த குழந்தைக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து, கண்களில் கண்ணீர் வடிய,
" இந்தாடா, வச்சிக்கோ. என் பேத்திக்கு,
உன் தம்பி தான் இனிமே பையன், அதனால உனக்கு இவன் இனிமே பேரன்". குழந்தையை தன் கையில் வாங்கிய ராமநாதன்,
" ரொம்ப நன்றிம்மா" அவனும் கண் கலங்கினான்.
" எதுக்குடா நன்றி, இது உன் சொத்து , நீ செய்த முடிவு சரியான முடிவு"
மீனாட்சி கூற
" நீங்க எப்பமா நம்ப வீட்டுக்கு வறீங்க"
ராமநாதன் கேட்க
" இனி என் வாழ்க்கை இந்த கதிர் கூட தான், இந்த முடிவுக்கு எனக்கு பிறக்காத மகன் கதிர் கண்டிப்பா சம்மதிப்பான்"
" நீங்க உங்க வாழ்நாள் முழுவதும் எங்கூடவே இருங்க, நீங்க எங்கூட இருக்கறது எனக்கு பெரிய பலம்" கதிர் சொன்னான்.
" நாளை உனக்கு கல்யாணம் ஆனா, அப்ப" மீனாட்சி கேட்க
" நம்மளோட  இந்த ஏழு மாத பந்தம் சாதாரன விஷயம் இல்லம்மா. உங்க கையால நான் சாப்பிட்டு இருக்கேன், எனக்கு பொண்ணே நீங்க தானே பார்க்க போறீங்க" கதிர் சொல்ல
பிறந்த குழந்தையை கேசவனிடம் கொடுத்து விட்டு, " கதிர், உன்னை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். உன் உயர்வான குணம் எனக்கு கிடையாது, உனக்கு என்ன உதவி வேனும்னாலும் எனக்கு போன் பண்ணு, இந்தா இந்த பணத்தை செலவுக்கு வச்சிக்கோ"
ராமநாதன் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டு, அங்கிருந்து இருவரும் விரைவாக விடைபெற்று மருத்தவமனைக்கு விரைந்தனர்.

சில நாள் கழித்து, மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில்.....
" நீங்க ரொம்ப டல்லாவே இருக்கீங்க,
யார் கூடவும் ஜாலியா பேச மாட்றீங்க, எனக்கு தெரியும் நீங்க உங்கம்மாவ நினைச்சு மனசுகுள்ள புழுங்கறீங்க"
மீரா ராமனாதனை பார்த்து கேட்டாள்.
" அதல்லாம் ஒன்னும் இல்ல"
" நீங்க பொய் சொல்றீங்க, நீங்க எவ்வளவு ஜாலியான கேரெக்டர்னு எனக்கு தெரியாதா"
" இப்ப என்ன பண்ண சொல்ற"
" ஏன் என் கிட்ட இவ்வளவு கோப படறீங்க"
" நான் எங்க கோபப்பட்டேன், என் சுபாவமே இப்படி தான்"
" எனக்கு தெரியும் நீங்க மனசுகுள்ள என்ன நினைக்கறீங்கன்னு"
" என்ன...என்ன"
மீரா சற்றும் எதிர்பாராமல் ராமநாதன் காலை பிடித்து கொண்டு, " என்னை மன்னிச்சுடுங்க, என்னால தான் நீங்க உங்கம்மாவ பிரிந்தீங்க, அவங்க மட்டும் இந்த குழந்தை பிறக்கலன்னா, என் பெண்ணோட  கதி, நனைச்சி கூட பார்க்க முடியலிங்க, ஒரு தாயா தன் மகனை பிரிந்து உங்கம்மா எவ்வளவு கஷ்டபட்டுயிருப்பாங்க, நான் உணர்ந்துட்டேன். என்னை தயவு செய்து உங்கம்மா இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போங்க, அவங்க கிட்ட நான் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும். நான் மன்னிப்பு....."
தேம்பி, தேம்பி  அழுதாள் மீரா.
அவள் தொள் தொட்டு, அவளை உயர்த்தி, மனம் திருந்தியவளை தன் மார்போடு அணைத்து, " மீரா , டோன்ட் கிரை. பிளீஸ் ஸ்டாப் யுவர் க்கிரையிங், மீரா ஐ லவ் யூ"
- பாலு.

எழுதியவர் : பாலு (4-Jun-21, 4:15 pm)
சேர்த்தது : balu
பார்வை : 161

மேலே