இன்றோ பலர்
" *_இன்றோ பலர் "_*
சென்றதோ மழையில் என்பர்
... சிறிதுதான் நனைந்தேன் என்பர்
மென்றதோ அசைவம் நேற்று
... மேலதில் வலியே என்பர்
தின்பதில் ருசியோ இல்லை
... தீதெனத் தெரிய வில்லை
சென்றதும் ஆவி போட்டால்
...செம்மையாய்ப் போகும் என்பர்
தனிமையில் இருக்கே னென்பர்
... தனியறை இல்லா வீட்டில்
இனிப்பெதும் இல்லை என்றே
... இனிபலா சுவைப்பர் தேடி
புனிதமே என்றே நாடி
புகுவரே புனிதக் கூட்டம்
தனிந்ததே காய்ச்ச லென்று
...தாவியே கடைக்கும் செல்வர்
பரவிடும் கிருமித் தொற்றின்
...பயன்தரும் செய்தி கேட்பர்
விரவினால் கூடும் என்றே
...வீட்டிலே வீழ்ந்த போதும்
சுரமிகு நண்பர் பேச
... சுவைமிகு பேச்சை நாடி
இரவினில் சென்று வந்தால்
...இனியுமா மாறும் சொல்லு?
( *அறுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்).*
கொரோனா நோய் கண்டவர்கள் ... சமூகத்தில் நடந்து கொள்ளும்.....அலட்சியப் போக்கு.
இதனால் மற்றவர்க்கும் நோயை பரப்புவர்.
மரு.ப.ஆதம் சேக் அலி