மென் மனநிலையிலேயே

அறிவிக்கப் பட்டது ஊரடங்கு தளர்வு
அவிழ்த்து விட்ட பன்றியாய் மக்கட்திரள்
இன்றொரு நாளிலே இறப்பதாய் எண்ணி
எல்லா இடத்திலும் குழுமிய நெரிசல்
சாராயக் கடைகளிலோ சாரை சாரையாய்
புலால் கடையில் புழக்கடை புழுவைப்போல்
வரைமுறையில்லா இருசக்கர வாகன ஓட்டிகள்
ஆண்களைவிட பெண்களே அதிகமாய் சுற்றியபடி
காவலர்களை கண்டபடி பேசும் ஊர் சுற்றிகள்
பன்றியை பாலால் குளிப்பாட்டி உடையிட்டாலும்
புடை வாசச் சாக்கடையிலே புரண்டு உருளுமாம்
மக்களும் அது போன்ற மென் மனநிலையிலேயே.
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Jun-21, 6:57 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே