கடலும் மரமும்

மரங்கள் மனிதனை வாழவைக்கும் நுரையீரல்கள்
ஆம் மரங்கள் விடும் பிராணவாயு நம் உயிர்க்காற்று
இப்படி எண்ணியபோது கடல்கள் நினைவுக்கு வந்தன
மண்ணில் நான்கில் மூன்று பிங்காம் கடல்கள்
நமக்கு மீன் போன்ற உணவு தந்தும்
முத்தும் பவளமும் விளையும் நீர் தேக்கம்
இப்படி கடல் தரும் வளங்கள் நினைவின் அலைகளாய்
மனதில் மோத ஒன்றை மறந்தோமே .....
மரங்களை விட நம் கடல்கள்தான் மானிட
வர்கத்தையே வாழவைக்கும் பிராணவாயு உறைவிடம்
நம் மண்ணுலகைக் காக்கும் 'மாபெரும் நுரையீரல்கள்'
என்னே இந்த இறைவனின் படைப்பு .... இயற்கை
கடல் நீரிலேயும் மாசு சேர்க்கும் மனிதர்,,,,!!!!!!!!!!!

இன்று கடல்கள் தினமாம்.... கொஞ்சம் சிந்திப்போமா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jun-21, 7:50 pm)
Tanglish : katalum maramum
பார்வை : 90

மேலே