ஏன் கவலை

மனிதா !
கவலையை விடு !...
நீ... யாரென்று
உனக்குள் நினைவு
இருக்கிறதா?....


அன்று...
நீ இந்திரியத்
துளியினுள் இருந்த
ஒற்றை விந்தணு மட்டுமே ...

கோடிக் கணக்கான
விந்தணுவின்
பந்தயத்தில் ...
நீ மட்டுமே ...
கருமுட்டை என்ற
எல்லைக் கோட்டைத்
தொட்டு ....துளைத்து...
வெற்றிகொண்டவன்...

அதனால் தான்
நீயே உருவானாய் ...

அன்று...
கோடி எதிர்ப்பாளர்களைக்
கடந்தவன் ...வென்றவன்....
இன்று...
தெருக்கோடியில்
நின்று கொன்று ....
எதிரிக்குக் கலங்கலாமா?....

எழுதியவர் : PASALI (10-Jun-21, 10:11 am)
சேர்த்தது : PASALI
Tanglish : aen kavalai
பார்வை : 99

மேலே