ஆன்றோர் வாக்கு

பயணத்தில் போகும் பயணிகள் ரயில்
பயணத்தடத்தில் காணும் 'வழிக்குறிக்கு'
ஏற்றவாறு போயின் பயணம் இனிதே
முடியும் இல்லையெனில் தடம் புரண்டு
துன்பம் தரும் அது போல வாழ்விலும்
ஆன்றோர்கள் அருள் வாக்கில் பயணித்தால்
துன்பம் தவிர்த்து இனிதே வாழ்ந்திடலாம்
ஆயுள் உள்ள வரை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Jun-21, 9:28 am)
பார்வை : 35

மேலே