பசியில்லாத பருவமா
பசியில்லாத பருவமா
பழம்கொத்தாத பைங்கிளியா
பனி இல்லாத புல்தரையா
பார்த்து ரசிக்காத பாவை விழியா
விழியில்லாத ஓவியமா
விருந்து படைக்காத கட்டழகா
விருப்பம் இல்லாத காதல் காவியமா
உதையம் இல்லாத சூரியனா
உருவம் இல்லாத ஓவியமா
உயரம்தான் இல்லாத மலைச்சிகரமா
ஒளியில்லாத விழியா
ஓசையில்லாத அருவியா
நிழலில்லாத உடலா
நிலவில்லாத இருளா
நினைவில்லாத மனமா
நித்திரையில்லாத கனவா
மரபு இல்லாத தமிழா
மணம் இல்லாத மலரா
மழை சுமக்காத கார் முகிலா
மங்கை சுமக்காத கரும் கூந்தலா
மானம் காக்காத மாராப்பா
மயக்கம் தறாத சரசமா
காற்றுத் தொடாத ஸ்பரிசமோ
காக்க வைக்காத சுவாரஸியமோ
அட
பனி இல்லாத புல்தரையா
பார்த்து ரசிக்காத பார்வையா
கடல் தாங்காத நுரையா
கட்டழகு தாங்காத வயதா
பருவம் செய்யாத குரும்பா
எடுத்து சுவைக்காத கரும்பா
பசுமையில்லாத இயற்கையா
விதையில்லாத விருச்சகமா
வயிருக்குத் தெரியுமா வாலிப ப்பசி
வயதுக்குத்தெரியாதா
இளமையின் ருசியா
பசியில்லாத பருவமா
cழம்கொத்தாத பைங்கிளியா
பருவம் தொத்தாத பருவ
நங்கையா
அட பார்த்து ரசிக்காத உருவ
நாணமா
பாய்ந்து வராத நதி வெள்ளமா
பதுங்கிவராத புலியா
பனி இல்லாத புல்தரையா
பகையில்லாத மன்மதனா
சிலையில்லாத கோவிலா
சினம் இல்லாத சற்றின்பமா
சுவரில்லாத மாளிகையா
சுற்றம் இல்லாத வாழ்க்கையா
சுகம் கொள்ளாத கருவரையா
சுமையில்லாத கற்ப்பமா.
ஈய்க்கள் மொய்க்காத பழரசமா
இதயம் மொய்க்காத பருவரசமா
அட
பழம் தொங்காத மரக்கிளையா
பருவம் சுமக்காத பால்குடமா
உருவம் சுமக்காத உயிர்க் கூடமா
அட
பனியில்லாத மார்கழியா
பகையில்லாத மன்னவனா.