அடக்கத்தில் மிளிரும் அழகு

மோகனப் புன்னகை வீசும் அதரம்
பவளவாய்த் திறந்து சிரித்திடுவாளோ என்று
காத்திருக்கும் நான் இங்கே அவளெதிரில்
பொங்கும் இளமை எழிலெல்லாம் தனது
சேலையின் முந்தானையில் லகுவாய்ப்
பூட்டி வைத்து இப்போது என்னைப் பார்த்து
மெல்ல சிரிக்கின்றாள் அவள் என்மனம் கவர
கள்ளமில்லா சிரிப்பு அது என்னென்பேன்
அவளழகை கிராமத்து பைங்கிளி அவள்
அவள் அழகே அடக்கத்திற்கு சான்று
அடக்கம் அவள் அழகின் இலக்கணம்
முத்துச் சிப்பிக்குள் அழகுமுத்து அழகாய்
அடங்கி இருப்பது போல இவள்
அடக்கத்தில் அழகின் அழகாய் பொலிவுறும்
அவள் என்னவள் ஆவாள் எப்போதோ
காத்திருப்பேன் நான் அது வரையில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Jun-21, 1:59 pm)
பார்வை : 148

மேலே