உன்னழகில் துள்ளும் நீரோடை

பஞ்சு இழைந்தால் நூலாடை
நெஞ்சு இழைந்தால் கவிதை
இதழ்கள் இழைந்தால் புன்னகை
கருவிழிகள் இரண்டும் திராட்சை
கன்னம் திராட்ச்சை மதுக்கோப்பை
உன்மனம் பொழியும் காதலமுதை
என்மனம் உன்னழகில் துள்ளும் நீரோடை

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jun-21, 10:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 118

மேலே