ஈன்ற விதைகள்
அருகென பொறுத்து நிலைத்து
ஆலென விரைவியே பரவியும்
இலக்கு ஒன்றை நோக்கியே
ஈன்ற விதைகள் நன்றாய்
உலகினை அறிந்து தெளிந்து
ஊக்கமுடன் நற்செயல் செய்தே
எவ்வகை நிலையிலும் உறுதியாய்
ஏரினைப் போன்று முன்னோக்கி
ஐந்து பூதங்களை போற்றியே
ஒரே நிலையிலே தொடர்ந்து
ஓய்வின்றி வெல்லும் உறுதியுடன்
ஒளவியம் துளியும் கொள்ளாது
எஃகென வாழ்தலே மனிதப் பிறவியாம்.
----- நன்னாடன்.