நோபல் தேர்வுக்குழுக்கு ஒரு விண்ணப்பம் …………

அமைதிக்கான
நோபல் பரிசுக்கு
மகாத்மாதான் சரியானவர்.

ஆனால்
காலம் தேர்வின் விதியை
மாற்றிக்கொண்டே இருந்தது.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை
எதிர்த்தவர்
காந்தி என்பதினால்

அவர் உயிரோடு இருந்தபோது
அவரின் தகுதியை
உதாசினப்படுத்தியது
தேர்வுக்குழுவில்
ஒரு அங்கமாய் இருந்த
ஆங்கில அரசாங்கம்.

மகாத்மா மறைந்த பிறகு
அமைதிக்கான
நோபல் பரிசுக்கு
அவரின் பெயரை
பரிந்துரை செய்தபோது

இறந்தவருக்கு
தருவதில்லை
பரிசு என

தேர்வு விதியை
மேற்கோள்காட்டி
மென்மையாய்
மறுத்துவிட்டது
தேர்வுக்குழு….

தகுதியானவருக்கு
தரவேண்டிய
சரியான பரிசை .

எழுதியவர் : இரா.ரமேஷ் (12-Jun-21, 4:28 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 58

மேலே