மார்பு நனைப்பவளே
மார்பு நனைப்பவளே;
மாராப்பு போடுபவளே;
மல்லிகைப்பூ சூடுபவளே;
மனதில் கிடந்து தவிப்பவளே;
அழகான கண்மணியே !
ஆழமாய் ஆழ்மனதில் பதிந்து விட்டாய்;
அளக்களிக்கத் துவங்கிவிட்டாய்,
விளக்குத் திரியாய்,
நெஞ்சில் எரிகின்றாய்;
விடுதலைபெற்ற பறவையாய்,
மனதில் பறக்கின்றாய் ;
விடைகாண முடியாது தவிக்கக்விட்டாய்;
நீயா! இல்லது உன் நிழலா!
நீயா! இல்லை உன் நினைவா!
நீ இல்லை, வெரும் நித்திரையா!
முத்த மழை பொழியும் என்று இருந்தேன்,
முத்து முத்தாய் கண்ணீர்மழை
கண்ணில் சொறியவிட்டாய்
மோக மழை எது ! மொய்க்காத கண்கள் எது!
பொய்க்காத காதல் எது!
போகமுடியாத கால்கள் எது!
சுற்றி சுற்றி வந்தேனடி;
சுற்ற வைத்தாயடி; பார்க்க வைத்தாயடி;
கதறி கதறி பார்த்தேனடி;
நீ சிறகடித்து பறந்ததனால்;
சிதறிப்போனேனடி.
பூவிழியே!
உனக்குள் ஏனடி பூகம்பம்;
புறப்பட்டுவந்தது, காதல் வேகமடி
அது காதல் மோகமடி,
போர்க்கொடி எதற்கு !
காதற்களம் காத்திருக்க, போர்க்களம் எதற்கு.
தோற்கடிக்கவேண்டாம் ;
தோல்வியை ஏற்று தொலை நாள் ஆகிறது.
தோளுக்கு இறையாகவா(வா)
தொந்தரவு இல்லை,
தொடங்கிவிட்டது,
கிடந்துவிட்ட காதலை கண்டெடுக்க
கண்ணும் தூது போனது.
சூது ஒன்றும் இல்லை; சுருண்டுபோனது மனது,
திருடி விட்டாய் இதயத்தை;
திரும்பிப்பார்க்க பயம் ஏன்;
வெடித்துத் தெரிக்கும் பட்டாசு வெடிப் பொறிபோன்று
வெடிக்காதே!
விலகிப்போகாதே ! விளக்கேற்று;
வெருதாய் கிடக்கும் ஒருதலைக்காதலுக்கு.