ஆடம்பரத்தில் இல்லை

அடுக்கு மாளிகை
அலங்கார கட்டமைப்பு
அழகுமிகு உணவகம் !
வண்ணமிகு காட்சி
வாஞ்சை நிறைந்த
வார்த்தை ஜாலங்கள் !
அறியாத பெயரில்
புரியாத வடிவத்தில்
பல்வகை பண்டங்கள் !
புசித்து மகிழ்ந்திட
யோசிக்கும் வேளை
பசியும் பறந்திடும் !
மலைப்பாக உள்ளது
வரிசையில் கண்டதும்
குழப்பத்தில் நிற்போம் !
சூடாக இருந்தாலும்
சுவையும் குறைகிறது
முகம் சுளிக்க செய்கிறது !
கீற்றுக் குடிசை
இலவசக் காற்று
மலிவு விலை
மணக்கும் உணவுகள் !
ஈடேது இணையேது
ரசித்து ருசிக்கும்
சாதாரண சமையல்
சாமானியன் மகிழ்ச்சி !
ஆடம்பரத்தில் இல்லை
பாரம்பரிய அறுசுவை!
எளிமையான இடத்தில்
இன்பம் தரும் உணவு !
பழனி குமார்
16.06.2021