எல்லாம் அரசின் கையில்

" *எல்லாம்... அரசின் கையில்* "

(5 காய் மா புளிமா)

வந்ததிலே முதலலையில் வழுக்கினரே கிழமெல்லாம் !
...வந்ததாலே மாண்டோர் பலரே !

நொந்ததிலே இரண்டிலேயோ நுழைந்ததுபார் வாலிபருள் !
... நூழிலையில் மீண்டோர் சிலரே !

பிந்திவரும் மூன்றிலேயோ பிஞ்சுகளை நஞ்சாக்கி
... பெற்றவரை அஞ்சிக் கலக்கும் !

சிந்திக்கும் அரசிதுவோ சீர்தூக்கித் தடுத்துவிட்டால்
...சீக்கிரத்தில் மீள்வோம் தனித்து.

( *எழுசீர்க் கழிநெடில்* *ஆசிரியவிருத்தம்)*

மரு.ப.ஆதம் சேக் அலி

எழுதியவர் : PASALI (17-Jun-21, 5:48 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 13

மேலே