பெண்ணின் உள்ளமது
வஞ்சித்துறை
பெண்ணின் உள்ளமது
கண்ணின் விழியைப்போல்
கண்ணை கலங்காமல்
திண்மப் பொருளாலே --- (1)
கண்ணில் ஆடிசெய்து
கணக்காய் பார்ப்பதுபோல்
பிணக்கிலா முறையிலேயே
பெண்மை காத்திடுவோம் --- (2)
வெள்ளை மனமுண்டு
பிள்ளை குணமுண்டு
சொள்ளை சொல்கூறி
ஞெள்ளை என்றாவர் --- (3)
சொள்ளை - சொத்தை, இழுக்கு, காரியக்கேடு
ஞெள்ளை - நாய்
ஆயினும் பெண்களே
ஆயிரம் திறன்பெற்று
தீயினம் விரட்டுவர்
நோயின்றி வாழ்வரே --- (4)
----- நன்னாடன்.
தீயினம் - தீயோர் கூட்டம்