மலடியின் குமுறல்

ஆராரோ; ஆரிராரோ;
ஆத்தாவாகத்தான் வக்கில்ல;
ஆசையாகத்தான் ,
அடுத்தவக குழந்தையை தூக்கவும் ராசியில்லை;
மரப்பாச்சி பொண்மை நீயிருக்க,
மடியுறக்கம் ஏதுக்கடி;
பிள்ளைவேண்டி,
தில்லை போகிவந்தேன்,
தொல்லைதான் வந்ததடி.
பிள்ளைவரம் இருந்து,
சுற்றாத கோவில்இல்லை;
சுமந்திட பிள்ளையில்லை.
பசுவும் கன்று ஈனுது;
பாழாப்போன என் வயிரும்,
மலடியானது.
சொல்லடிபட்டே சுமைய ஏந்துது;
ஆத்தான்னு கூப்பிட,
நாதியி இல்லை;
ஆராரோ பாட ,
பிள்ளையில்லை,
ஆராத மனசிலே;
பாசம் இல்லை;
ஈராறு வருடம்;
தாண்டியும்,
ஈன்றவில்லை.
இறைவனுக்கும்,
என் தவிப்பு தெரியவில்லை.
தொப்புள் கொடி,
உறவில்லை;
தொட்டிலிலே பிள்ளையில்லை;
தொட்டுவிளையாட குழந்த இல்லை;

என் தாய்க்கு,
மகளாகியும்,
நான் தாயாகவில்லை.

தீராத நோய் இன்றும்
தீரவில்லை,
தீட்டாகிடாம இருக்க நாதியில்லை.

கருசுமந்தும்,
குழந்தை உருவாக,
கடவுளுக்கும் கருணையில்லை.

பெண் பிறப்பு எடுத்தது,
என் குத்தமில்லை;
பெண்ணாகிய என்னை;
மலடியாக்கியது,
உன் குத்தமுமில்லை;

பூவையே பூவாக நீ இருக்க,
நாராக நானிருக்க,
நமக்கு வந்து சேர்ந்தது,
வீன் பலி.

நீயாக நான் இருக்க,
நானக நீ இருக்க,
சோகம் தான் ஏனடி,
குழந்தையே நீயடி,

அவரையும் காச்சிடிச்சி,
அல்லியும் பூத்திடிச்சி,
பாகற்காயும் தொங்கிடிச்சி,
பலாப்பழத்தில்
சொளையும் நிறஞ்சிடிச்சி;
தென்னம்பிள்ளை காச்சிடிச்சி;
தொட்ட தெல்லாம்,
பொன்னாச்சி;
தொட்டில் இட,

பிள்ளை இல்லை.

மந்தியின் மடியில்,
மழலையும் கொஞ்சி விளையாடிடிச்சி;
காக்கையின் சிறகுக்குள்,
குஞ்சிகள் சிறையாச்சி;
கெஞ்சி கெஞ்சி கேட்டும்
கொஞ்சிட பிள்ளை,
கிடைக்களையே.

மலடி இருளி என்றே;
ஏசிட்டோர் பலர் உண்டு,
கள்ளியிவளும் சொல்லி,
அழுதே;
கண்ணீரும் காய்ந்திடுச்சி.

காயா மலடியாகி;
இனமலடி யாகியும்,
ஈசன் காது எட்டலையோ!
காயா மலடிக்கு,
கற்பக விருச்சமே,
விருச்சத்தைத் தந்திடு,

கற்சிலையே என்னை
கல்லாக்கி விளையாடுகின்றாயோ,
கடவுளென்று நம்பி
காடு கடல் தாண்டி,
கழிப்பைக் கழிச்சிவிட்டேன்,
கற்பப்பை நிறையலையே!
கடவுளாய் நீ இருந்தால்;கன்னி கோளத்தை போக்கிடு.
சொல்லடிப்ட்டது போதும்,
சொக்கநாதா
சரவணனே குழந்தையாய் வந்திடட்டும் .

சோறும் சுவைஊட்டும்,
பழமும் தந்திடுவேன்;
பொன் கின்னத்திலே,
அமுதும் படைத்திடுவேன்;
கன்னக் குழியில்,
முத்தம் தந்திடுவேன்;
குழந்தையாய் வந்து பிறந்திடு.

மலடி என்ற பெயர் வேண்டாம்;
மங்கையராய் பிறந்ததே தவறென்றால்,
மண்ணில் மனித வர்க்கம் ஏதைய்யா

இந்த அபலையின்,
குரல்கேட்டு,
அம்மா என்றே கூப்பிட,
குழந்தை வரம் தந்திடு

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (18-Jun-21, 10:32 pm)
பார்வை : 638

மேலே