கருப்பையில் குழந்தையின் கதறல்

அம்மா,அம்மா, அம்மா,
இருட்டாய் இருக்குது அம்மா,
எங்கு மே இருட்டாய் இருக்குது அம்மா,
திருட்டு உலகம் என்று,
இருட்டை படைத்தானா! இறைவன் அம்மா,
காலம் எல்லாம்,
கண்ணீர்தான் வடிக்க வேண்டும் என்று,
தண்ணிரில் மிதக்க விட்டாயா அம்மா.

கற்பபையில் வாழவைத்தாய்,
கனவாய் வாழ்க்கை போய்விடும் என்று சொல்லாமல் ,
கள்ளத்தனம் செய்தாயா அம்மா,
பூலோகத்திற்கு வரவு தந்து,
காலம் எல்லாம் அழுவேன் அம்மா,
ஆசை முகம் பார்க்கத்தான் துடித்தாய்,
ஆய்யகோ அபளை
படப்போகும் அவதியை,
சொல்ல மறந்தாயே அம்மா,
பிஞ்சுக்கரங்கள் நஞ்சை ஏந்த வேண்டும் என்று,
சொல்ல வில்லை அம்மா.
நெஞ்சி முழுதும் ஆசையைவைத்து,
நேசித்த நீ,
நாளை ஒருவன்,
வருவான் நாள்களைக்,
கழிக்கவேண்டும் என்று கூற வழில்லையம்மா.
வஞ்சகமடி உலகம் என்று ஏன்
கூறவில்லையடிஅம்மா;
வறுமையில் வெந்துதான்
சாக வேண்டும்
என்று கூற மறந்தாயம்மா;
குழப்பத்தோடு
ஒண்டி இருக்கேனம்மா,
ஆடவனை அண்டிதான்,
அசையாமல் இருந்தே ஆக வேண்டும்,
என்பததை கூற தவறிவிட்டாயே அம்மா;
குடம் தண்ணீர் உன் வயற்றில் இருக்க,
வந்து பிறந்து விட்டால்;
குடத்து நீருக்கு தவிக்கவேண்டும் என்றும்
சொல்ல வில்லை அம்மா,
கருப்பையில் உறங்கிய என்னை,
உலக கல்லறைக்கு அழைக்கின்றாயே அம்மா;
குப்பையும் கூளமும்,
குவிந்து கிடக்கும்,
உலகிற்கு குதூகலமாய்,
அழைக்கின்றாயே அம்மா,
உன் கருப்பையில் இருந்தவள்,
ஈன்று வந்தபின்பு,
இனம் அறியாத கவலையுடன்
காப்பகத்தில் தான் தூங்க வேண்டும்
என்று கூற மறந்தாயே அம்மா;
காசுக்காக நீ ஓடினாலும்,
கால் கடுக்க நடந்தாலும்,
தூக்கியே சுமந்தாயே அம்மா,
தாலட்டுப்பாடி தூங்க வைக்கக் கூட
நேரம் கிடைக்காதே அம்மா,
நீ தூக்கி எறிந்து
நான் துயர்பட வேண்டுமோ அம்மா;
வீணாக பெத்தெடுத்து விட்டு ,
விட்டு சென்று விடுவாயே அம்மா;
இருண்ட உலகத்திற்கு நீ என்னை அழைத்துவந்து,
வாழ்வில் இருள் சூழ வைக்கப்போறாயே அம்மா;
இரக்கம் இல்லா மனிதக் கூட்டத்துடன்
இயங்க வைக்கப்போறாயா அம்மா.
இமையாக கருவறையில்;
காத்து வளர்த்து வந்தாய்,
இருட்டிய உலகில்
இளம் சிறார்களுக்கும் நடக்கும் ஆபத்தையும்
கூற மறந்தாயே அம்மா.
எச்சில் வாழ்வில்
பிச்சைதான் எடுக்க வேண்டுமா அம்மா;
கருவில் விட்ட கண்ணீர் இன்னும்
காயவில்லையே அம்மா;
தெருவிலும் திரிய வேண்டுமா அம்மா;
ஒரு நொடி ஆசையில்,
ஓலம் இட வைத்துவிட்டாய்;
ஓராயிரம் கனவுகளைச் சுமந்து;
ஓயாமல் கதற வைப்பாயோ அம்மா;
என்ன தவம் செய்தேனோ என்று;
ஆசை பட்டாய்;
ஈன்ற உடன்,
என்ன வதை படப்போகின்றேன்,
என்று கூற மறந்தாயே அம்மா;
எட்டி உதைத்தடி என்கால்கள் உன் வயிற்றில் என்றாய் ;
எட்டி உதை வாங்கப்போகுதே, என் சரீரம் என்று கூற வில்லையே அம்மா;
பள்ளி செல்ல ஓட்டம்,
படிக்க ஓட்டம்,
படித்தது முடித்த பிறகும் ஓட்டம்,
வேலை தேடி ஓட்டம்
வீதியில் ஓட்டம், விதிக்குபின் ஓட்டம்,
பேருந்தில் ஓட்டம்
கோவிலில் கூட்டம்
ரேசன் கடையில் கூட்டம்,
ஆஸ்பத்திரியிலும் கூட்டம்,
மாலிலும் கூட்டம்,
கூட்டம் கூப்பாடு.
இதைஎல்லாம்
சொல்ல மறந்தது ஏனம்மா.
சுகமாய் நான் உன் வயிற்றிலே
உறங்கு கின்றேன்
சுற்றி வந்து, நித்தம் நடந்ததை சொல்லிடு அம்மா;
சொந்தமும் வேண்டாம்,
உங்க சோக உலகத்தைப் பார்க்கவும் வேண்டாம்.
வேண்டும் யென்றால்,
கருவறையை கல்லறையாக மாற்றிவிடு,
இறுதியாக உறங்கி விடுகின்றேன்,
இனம் தெரியாத உன் சுகத்தில்,
உன் தேகத்திற்குள்ளே,
மடிந்துவிடுகின்றேன்; அம்மா.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (18-Jun-21, 11:31 pm)
பார்வை : 48

மேலே