கைவீசம்மா கைவீசு கைபேசி தருகின்றேன்
கைவீசம்மா கைவீசு;
கைபேசி தருகின்றேன்
கைவீசு;
கல கலன்னு பேசியே பொழுதை
வீணாய் கழிக்கலாம் கைவீசு;
கைவீசம்மா கைவீசு;
சனிடரி நாப்கின் போட்டே,
கக்கா போகலாம் கைவீசு ;
கைவீசம்மா கைவீசு;
மறந்திடாம மாலுக்கு
காரிலே போகலாம் கைவீசு;
கார்டைத்தேய்தே,
ஷாப்பிங் பண்ணலாம் கைவீசு;
கிரிடிட்காட்டிலே,
நீ கேட்பதெலாம் வாங்கலாம் கைவீசு;
சொகுசாய் பார்லருக்கு போகி,
சொக்கியபடியே பாப் கட் வெட்டலாம் கைவீசு;
கைவீசம்மா கைவீசு,
பீச்சிபக்கம் போய்,
காற்று வாங்கியே வரலாம் கைவீசு;
கைவீசம்மா கைவீசு;
அப்பாவும் வந்திடார் கைவீசு,
கையில் காசுபணம் இல்லாமலையே,
ஆன்லைனில் பட்டுச்சொக்கா வாங்கவே,
பணத்தை டிரான்ஸ்வர் செய்து விட்டார் கைவீசு,
கைவீசம்மா கைவீசு;
பர்கர் பிசா வாங்கித் திண்ணலாம் கைவீசு;
கைவீசம்மா கைவீசு
பசி எடுத்தால் பாஸ்புட் வாங்கி சாப்பிடலாம் கைவீசு,
கைவீசம்மா கைவீசு,
காண்மண்ட் போயே;
ஏபி சிடி என்றே,
ஆங்கிலத்திலே படிப்போம் கைவீசு.
கைவீசம்மா கைவீசு
கட்டாயம் அவுட்டிங்
போகலாம் கைவீசு;
காசை கரியாக்கலாம் கைவீசு