விழி ஆடி

எவ்வளவு பெரிய
ஒளிபெருக்கி என்றாலும்...
கண்களின்... ஆடிக்கு முன்
ஈடாகுமா?...

நினைத்தால்
குவிக்கிறாய்...
நினைத்தால்
விரிக்கிறாய்...

நினைத்தால்
கழுவிக் கொள்கிறாய்...
கண்ணீரால் ...

விழி ஆடிக்கு முன்
மற்றவை
வெறும் ஆடியே.

எழுதியவர் : PASALI (19-Jun-21, 5:09 am)
சேர்த்தது : PASALI
Tanglish : vayili aadi
பார்வை : 46

மேலே