மரத்தின் இறப்பு

கட்டை குத்திய
வீடுகளில் ...தெரிகிறது
இறந்த பனைமரங்களின்
உடல்கள் ...

காரை வைத்து
கட்டப்பட்ட
செங்கல்களில் தெரிகிறது ...

அதை சுடுவதற்குப்
பயன்படுத்தப்பட்ட
பனைமரங்களின் சுடப்பட்ட உடல்கள் ...

மரத்தின் இறப்பு...
மரபுகளுக்கும் தொடரும்.

எழுதியவர் : PASALI (19-Jun-21, 5:11 am)
சேர்த்தது : PASALI
Tanglish : maratthin irappu
பார்வை : 55

மேலே