நாவல்பழம் - நாகற்பழம் - நேரிசை வெண்பா

நாவல்பழம் (நாகற்பழம்)
நேரிசை வெண்பா
(’ர்’ ஆசு இடையிட்ட எதுகை)

மாந்தம் விளையும் வலிகரப்பான் உண்டாகும்
சே’ர்’ந்ததொரு நீரிழிவுஞ் சேருமோ - நாந்தலொடு
வாய்வுங் கடுப்பும் வருங்கொதிப்புந் தாகமும்போந்
தூய்யநா வற்பழத்தால் சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

இப்பழத்தால் அக்கினிமந்தம், உடல்வலி, கடுவன், சீத்தாகம், கடுத்தல் இவை உண்டாகும்; கொதிப்பு, தாகம் இவை நீங்கும்

குறிப்பு:

பள்ளிப் பருவத்தில் 1950 – 54 ல் ஓரணாவுக்கு கையில் அள்ளித் தரும் நாவல் பழத்தை, இன்று, கால் கிலோ ரூ 70 க்கு வாங்கினேன்; எண்ணி 25 பழம்தான் இருந்தன. ஒரு பழம் ரூ 3 /-

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-21, 1:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே