கணம்

தொடங்கும் முன்பே முடிந்தது
காலம் மெல்ல கடந்தது

காலன் நம்மை இணைத்தது
மீண்டும் பிரிந்து போகவா???

உந்தன் முகம் காணவே
எந்தன் மனம் ஏங்குதே

உந்தன் வாசம் காற்றிலே
எந்தன் சுவாசம் கலந்ததே

உந்தன் பெயரை நெஞ்சமும்
தினம் உச்சரித்து மகிழுதே

எந்தன் மன ஊஞ்சலில்
இறங்க நீயும் மறுப்பதேன்???

கணமும் கனமாய் மாறுமே
உன்னைச் சேரும் வரையிலே...

-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (19-Jun-21, 11:46 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : kanam
பார்வை : 35

மேலே