மூடுங்கள்
" *மூடுங்கள் வாழ்த்தும்"*
(காய் காய் காய் மா
...காய் காய் காய் மா)
எத்தனையோ முயற்சிசெய்தும்
இயலவில்லை தானே !
... இத்தினத்தில் விட்டிருந்தால்
இருந்ததெல்லாம் தேனே !
எத்தகைய ஆட்சிவந்தும்
இக்கடையு முண்டே !
... இக்கட்டில் மூடிவிட்டால்
இதன்வரவும் துண்டே !
உத்திரவோ வருமென்று
ஊர்சனமும் பார்க்கும் !
... ஒத்திடாத குடிகாரர்
உயிர்விடுவார் பார்த்தே !
புத்தியில்லா சனங்களுமே
புகழ்ந்துதானே பாட
... பொத்தியதை மூடிடுங்கள்
போற்றிடவே வாழ்த்தும் !.
( *எண்சீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்)*
மரு.ப.ஆதம் சேக் அலி