நீரின் பயணம்

" *நீரின் பயணம்"*

வானூரில் நீயுதித்து
வான்முட்டும் காட்டூரில்
தானூறி ஆற்றூரில்
ஓடியேய் - தானாய்க்
குளத்தூரில் தேங்கி
கிணற்றூரி லூறி
உளத்தூர் நுழையுமுன்னே
மேட்டூரில் தங்கிப்
பிடித்து உழக்கூரில்
வாயூ ரருந்திக்
குடிக்க குடலூர்
புகுந்து உடலூர்
குடிபுக செந்நீரில்
உள்ளூர ஏறியே
எஞ்சி வடியூரில்
தானூறி பையூரில்
மிஞ்சி சிறுநீராய்
மண்ணூர் விழும்போது
விஞ்சி மறைவதைக் காண்.

( *பஃறொடை வெண்பா)*

*(நீர் கடந்துவரும்* *ஊர்* *விபரம்* :

வானூர் -வான வெளி
காட்டூர் - வனம்
ஆற்றூர் - ஆறு
குளத்தூர் - குளம்
கிணற்றூர் - கிணறு
உளத்தூர் - நம் உள்ளம்
மேட்டூர் - தண்ணீர்தொட்டி
உழக்கூர் - தண்ணீர் பிடிக்கும் உழக்கு
வாயூர் - வாய்
குடலூர் - குடல்
உடலூர் - உடல்
செந்நீர் உள்ளூர் - இரத்தத்தின் உட்புறம்
வடியூர் - சிறுநீரகத்தின் நீர் வடிகட்டப்படும் நெஃப்ரான்கள்
பையூர் - சிறுநீர் பை
மண்ணூர் - மண்)

மரு.ப.ஆதம் சேக் அலி.

எழுதியவர் : PASALI (20-Jun-21, 7:38 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 86

மேலே