தந்தையர் தினம்
தேதி தோறும்
நேசிக்க வேண்டிய
அப்பாவை....
திதியில் மட்டும்
நினைக்கிறோம் ...
தினம் தினம்
நினைக்க வேண்டிய
தந்தையை ...
தந்தையர் தினத்தில்
மட்டும் நினைப்பது
விந்தை.
அவர் போட்ட
விதையில் ...
இன்று நீ
விருட்சம்...
நீ போடும்
விதைக்கே
அவர்தான் தந்தார்
உன்னை மிச்சம்.
தந்தையாய்
அப்பாவை
உணர்வதை....
நீயே தந்தையாகி
உன் மகனுக்கு
அப்பனாகும் போதே
உணர்வாய் ....
உலகில்
அப்பா மட்டும்தான்...
முதலில்
கதாநாயகனாகவும் ...
பிறகு வில்லனாகவும் ...
இடையிடையே
கோழையாகவும் ...
அவ்வப்போது
மூக்கை நுழைப்பவராகவும் ...
தெரிந்து விட்டு ....
போன பின்னே
கடவுளாகத் தெரியும்...
அதற்கிடையில்
அவர் மனிதனாக
வாழ்ந்தது மட்டும்
கடைசி வரை
எவனுக்கும் தெரிவதில்லை.
மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.

