வளர்க்கும் அப்பா
தொலைந்(த்)த என் அப்பாவை...
முதியோர்
இல்லங்களிலெல்லாம்
தேடினேன் ...
அங்கெல்லாம்
கிடைக்காதவர் ...
ஒரு புது வீடு
கட்டிடத்தில் ...
கையாளாகக் கண்டேன் ...
எத்தனை நாட்கள்
தேடுகிறேன்....
எங்கே சென்றாய் ?...
எனக் கடிந்து கொண்டேன் ...
எதற்காக...
இந்த கட்டிட வேலை?....
உன்னை எத்தனை
முதியோர் இல்லங்களில்
தேடினேன் தெரியுமா?.....
என்றேன் ...
அதற்கு அவர் ....
"ஏன்...நான்
முடங்கிக் கிடப்பேன்
என்று நினைத்தாயா?....
பிறரை
வளர்த்துதான் எனக்குப்
பழக்கம்...
எனவே... கட்டிடத்தை
வளர்க்கும் பணியில்
இருக்கிறேன்"....என்றார்.
கூடவே ....
"எந்த வளர்ந்த
கட்டிடமும்...
வளர்த்தவனைப் பார்த்து
வெறுக்காது"... என்றார்.
அது தான் அப்பா.
மரு.ப. ஆதம் சேக் அலி