வெள் வவ்வால் கறி Pomfret Fish - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வெள்ளைவவ்வால் தன்னை விரும்பிநிதம் உண்பார்க்குத்
தள்ளுகின்ற பித்தந் தரிக்குமோ - துள்ளி
வருங்கரப்பான் ஏகும் மயிலே புவியில்
அரும்பத் தியமாம் அறி

- பதார்த்த குண சிந்தாமணி

தினமும் இதனை உண்டால் பித்த மயக்கமும் கரப்பானும் அகலும்; இது பத்தியக் கறியாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-21, 10:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே