தலையணை காதல்
ஊர் உறங்கும் நேரம்
நீயில்லாமல்
நான் உறங்கவில்லை..!!
நீ என்னுடன்
இல்லாத இரவினில்
நீ தலை வைத்து உறங்கும்
தலையணையுடன் ..!!
நான் பேசுகின்ற
காதல் கதையும்
கண்ணீர் கதையும்
யார் அறிவார் நெஞ்சே
என் வேதனையை
யார் அறிவார் நெஞ்சே ...!!
நீ தலை வைத்து உறங்கும்
தலையணையை கேட்டுப்பார்
என் வேதனை உனக்கு புரியும் ..!!
--கோவை சுபா

