பாதை மாற்றிய போதை

" *பாதை மாற்றிய போதை"*

(8மா)-தேமா

அன்பே என்றாய் !
அண்டி வந்தேன் !
...ஆசை கொண்டாய் !
ஆளே தந்தேன் !

என்னே அன்பு !
என்றே கேட்க !
...இந்தா என்றே !
எல்லாம் தந்தேன் !

உன்மேல் கொண்ட
உண்மைக் காதல் !
...ஊரார் ஏச !
ஒட்டா தேனோ?

கன்னம் தொட்ட
கைகள் இன்றோ
... காய்ச்சும் போதைக்
கண்ட தாலா?


( *எண்சீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்)*

மரு.ப.ஆதம் சேக் அலி.

எழுதியவர் : PASALI (23-Jun-21, 11:09 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 28

மேலே