காலத்தை வென்ற கண்ணதாசன்

காலத்தை வென்ற கண்ணதாசன்

சிறுகூடல்பட்டியிலே
பிறந்தாலும்!
பெருங்கூட்டம் உன்
பாட்டால் பிறந்தது அல்லவா?

முத்தையா என இயற்பெயர்
பெற்றாலும்
கண்ணதாசனாக காலசுவட்டில்
காலடிபதித்தாய் அல்லவா?

தத்துப் பிள்ளையாய் நீ
போனாலும்!
தமிழர்களின் தத்துப் பிள்ளையாய்
நிலைத்தாய் அல்லவா?

நாராயணா என உன்னை
சுவிகாரர் அழைத்தாலும்
கண்ணனே உன்னை
ஆட்கொண்டவன் அல்லவா?

எட்டாம் வகுப்பு வரை
உன் படிப்பு!
எட்டாத தத்துவங்கள்
உன் படைப்பு!

கடைக்குபோனாய் காலணா
கொடுத்தாய்!
கருப்பட்டி வாங்கினாய்!
இது உன் முதல் கவிதை!

கண்ணே கலைமானே
கன்னிமயில் உன்னை
கண்டேன் உனை நானே
இது உன் கடைசி கவிதை!

கிரகலட்சுமி இதழ்
நிலவொளி
உன் முதல் கதை!

கிரகஸ்தர்களை கிறுகிறுக்க
வைத்தது உன்
கிளர்ச்சி பாடல்கள்!

கம்பன் பாரதியின் மேல்
பற்றுக் கொண்டாய்!
காலத்தை வென்று அவர்களோடு
நீயும் வெற்றி கண்டாய்!

வணங்காமுடி என
புனைப்பெயர் கொண்டவனே!
வணங்காதவரையும் உன்
தமிழால்வணங்க வைத்தவனே!

இருபது ஆண்டுகள் மட்டுமே
சினிமாவில் இருந்தாய்!
இமாலயச் சிகரங்களை
எளிதில் தொட்டாய்!

நாற்பது ஆயிரம் கவிதைகள்
எழுதினாலும்
வனவாசம் என்ற ஒரு
தன்வாசம் படைத்தவனே!

ஐயாயிரம் திரைப்பட
பாடல்கள் எழுதினாலும்
அர்த்தமுள்ள இந்துமதம்
அனைத்தின் சுருக்கம் அல்லவா?

இயேசு காவியம் படைத்து
மத ஒற்றுமைக்கு
மருந்து போட்டவனே

பாண்டிமா தேவியைப் படைத்து
பார்புகழ் பெற்றவனே
சேரன்மாதேவிதான் உனக்கு
சாகித்தியம் சூட்டி களித்தவள்

ஐம்பத்து நான்கு அகவையில்
புவிவாழ்வை துறந்தாலும்
ஐயமற அனைவர்
உள்ளத்திலும் தாழிட்டுக் கொண்டவன் நீ அல்லவா??

கவிஞர் புஷ்பா குமார்.

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (24-Jun-21, 7:08 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 431

மேலே