தொலைவில் நீ

தொலைத்த இடம் தெரியாமல் தொலைவில் இதயத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்!

துடிதுடிக்கும் சப்தம் மட்டும் என் செவிகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது!

அடைமழையாய் அடித்துக்கொண்டிருக்கும் என் இதய துடிப்பு!

உன் கையில் என் இதயத்தை பார்த்த பின்புதான் என் ஜீவன் மெல்ல மெல்ல மலருது!

கையோடு கை கோர்த்து கண்இமைகளை சேர்த்து துடிக்க விட்டு காதல் பூவை மணக்க செய்!

எழுதியவர் : சுதாவி (27-Jun-21, 8:17 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : tholaivil nee
பார்வை : 219

மேலே