நான் என்ன செய்வேன் கவிதைக்கு
வாழ்க்கையில் நான் இது வரை இட்டதில்லை ஒரு விதை
பின் எங்கிருந்து எழுதுவது கவிதை, எப்படி சொல்வது இதை?
சிறு வயதில் என்ன செய்தேன் எப்படி செய்தேன்,அறியேன்
பின், பெரும்வயதில் செய்ததை எப்படி நான் அறிவேன் ?
பள்ளி வயதில் கணக்கில் பல தவறுகளை நான் செய்தேன்
பிறகு பெரிய வயதில் கணக்கு பண்ண கற்றுக் கொண்டேன்
கல்லூரியில் பாதி நாட்கள் ஏதேனும் ஒரு ஆர்ப்பாட்டம்
இப்போதோ வாழ்வில் அனு தினம் ஒரு ஆட்டம் பாட்டம்
சிறு வயதில் பொய் பேசினால் நல்ல அடி கிடைத்தது
இப்போதோ பேசினாலே ஊட்டாண்ட அனல் பறக்குது
பின்னே நான் எப்படி அய்யா எழுத முடியும், கவிதை?
நான் எழுதினால் ஊரார் கொடுப்பார்களே நல்ல உதை
இப்படி இருக்க நான் என்ன செய்வேன் கவிதைக்கு?
ஏதாச்சும் கொஞ்சம் வேணும், கவிதை வித்தைக்கு
நீங்களே ஏதாச்சும் ஆலோசனை கொடுங்க கவிதைக்கு
நானும் ஏதாச்சும் போட்டு தாரேன் உங்க கைசெலவுக்கு