ஞெள்ளல் அகற்றிடும் சுற்றமுமே -கட்டளைக்கலித்துறை

கட்டளைக்கலித்துறை


மணமகள் சூலினால் சாம்பலை உண்ணால் மகிழ்ந்திடுமே
அணிகலம் பூட்டியே ஞெள்ளல் அகற்றிடும்
சுற்றமுமே
புணரியில் தன்னிலை மேம்பட தாயென
நல்எறுழில்
உணர்ச்சியால் பெண்ணும் மகிழ்ந்து இருப்பதும் இன்பமாமே. ---- (1)

குழவியும் உண்டியுள் மெல்ல வளர்ந்திட யாவருமே
அழகிய பெண்ணின் தலையிலே நித்தில மாலையையும்
அழகுடன் சூட்டி பெருமகிழ் வோடுமே நின்றிடவும்
குழகனை பெற்றதால் சிங்மென பெண்ணுமே இன்பத்திலே ---- (2)

மருப்பென மெல்ல குழந்தை வளர்ந்திட பெற்றோருமே
விருப்பமாய் சீருடன் கொஞ்சியே கல்வியை தந்தனரே
தருக்கமும் கற்றே குழந்தை பலவகை ஆற்றலோடே
நெருப்பென தூய்மை பனுவலை கற்றே பலமுடனே ---- (3)

ஞமனென கொள்கையை உள்ளம் புகுத்தியே தேர்போலவே
தமதுயிர் ஒப்பவே யாவையும் பார்த்தே நலமெனவே
கமழ்ந்திடும் பூவின் பொதுநிலைப் போன்று நடுநிலையில்
அமர்ந்தவன் தண்மையால் சேர்த்திட யாருமே ஒன்றெனவே ---- (4)

பரந்ததாய் உள்ள உலகினில் ஏமமும் மிஞ்சியவர்
உரக்கமாய் தீஞ்சொலை சொன்னால் பயத்தால் மனம்வாடிட
நரகமாய் வாழ்வும் தடுங்குமோ என்றே மனத்துன்னலால்
கரடென சிந்தனை நீங்கிட வந்தான் இமிழெனவே ---- (5)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Jun-21, 4:57 pm)
பார்வை : 33

மேலே