ஒரு வாரம் , சில வரம்

ஞாயிறு என்றதுமே உற்சாகமாகுதே வயிறு
அன்றுதானே கிடைக்கும் அருசுவை சோறு!

திங்கள் உதித்தால் நம் முகம் ஆகுது, முல்லை
திங்கள் வர அழைத்திடும், கடமை தொல்லை

செவ்வாய் இதழின் தேனை ருசிக்க ஆவல்
ஆனால் செவ்வாயன்று வெளியூர் டிராவல்

புதன் வந்தால் உவகை அடைகிறோம் அன்று
இதன் பின், இன்னும் 2 நாளே வேலை என்று

வியாழன், சோழன் போனில் அழைக்கிறான்
கம்பன் நீ, என இனிமையாக உரைக்கிறான்

வெள்ளி மாலை, துள்ளும் மனம், வீடு செல்ல
மல்லி வைத்து, கன்னியை அள்ளிக் கொள்ள

சனி காலை சங்கொலி, காதுகளில் கேட்காது
இனி அன்று முழுதும், இன்ப லீலை நிற்காது

அடுத்தது என்னன்னு ஆவலா பாக்கறீங்களா
மேலேதான் சொல்லியாச்சே, ஞாயிறு பற்றி

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்ரமணியன் (27-Jun-21, 12:49 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 59

மேலே