நாள் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி காணலாம்

காலை உதித்ததும் கண் விழிக்கலாம்
கண் விழித்ததும் காலை உதிக்கலாம்
எழுந்த பின்னர் இறைவனை துதிக்கலாம்
ஆண்டவனை துதித்த பின்னரும் எழலாம்
தண்ணீர் அருந்தியும்(சூ) காப்பி பருகலாம்
காப்பி பருகி பின்னும் தண்ணீர் குடிக்கலாம்
நன்கு உழைத்து பின் உணவு அருந்தலாம்
உணவு அருந்திய பின்னும் உழைக்கலாம்
நம் தேவைகளுக்கு அன்றாடம் பாடுபடலாம்
நலிவுற்றோர் வாழ தொண்டிலும் ஈடுபடலாம்
சிரித்து மகிழ்ந்திட நகைச்சுவை செய்யலாம்
பிறர் மகிழ்ச்சியுடன் களித்திட முனையலாம்
ஆள் எப்படி இருந்தாலும் சரி சமாளிக்கலாம்
நாள் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி காணலாம்

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Jun-21, 10:39 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 65

மேலே