அடாடா, துள்ளி வருமே முகத்தில் புன்சிரிப்பு

அமைதியான அதிகாலை நேரத்தில் எழுச்சி
விழியிலும் மனதினிலும் ஒரு தனி மகிழ்ச்சி
சொத்து போன்ற பற்களை நன்றாக துலக்கி
கை கால்கள் சுத்தம் செய்து உடலை உலுக்கி
துடைத்த முகத்தில் அழகாக விபூதி அணிந்து
பூஜையறையில் இறைவனை கண்டு பணிந்து
மெதுவாகச் சென்று இருக்கையில் அமர்ந்து
சமையலறையை நோக்கி பார்வை தவழ்ந்து
பில்டர் காப்பியின் மணம் நுகர்ந்து மகிழ்ந்து,
மறுநிமித்தில் சுடச்சுட காப்பி தந்து உபசரிப்பு
முதல் வாய் குடிக்கையில் கிடைக்கும் பூரிப்பு
அடாடா, துள்ளி வருமே முகத்தில் புன்சிரிப்பு

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Jun-21, 10:49 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 65

மேலே