கதகதப்பு - 2♥️♥️
கதகதப்பு - 2♥️♥️
கதகதப்பு தேடி
குளிரில் நடிங்கியவன்
போர்வை உடல் குளிரை
போக்கினாலும்
உள்ளக்குளிரை
யார் போக்குவார்
அவளை ஆசை தீர அள்ளி
அணைக்க ஆசை தான்
ஆசைக்கு ஆசைபட்டு
பூசை விழுந்தால்
கொழுகட்டையை யார்
சுமப்பது
அதுவும் பூரி கட்டையால்
அடி வாங்கினால்
வீங்கத்தானே செய்யும்
ஒரு வாரம் ஆகியும்
கோபம் தனியவில்லை
ஒரே வீட்டில்
தனித்தனி அறையில்
எல்லாம் என் வாய் கொழுப்பு
எதிர்வீட்டு மடிசார் மாமியின்
மகளின் கண்கள்...
சொன்னது தான் தாமதம்
அப்பப்பா.... பூ ஒன்று புயலானது
கண்கள் சிவந்து
ருத்திர தாண்டம் ஆடிவிட்டாள்
போர் களம் ஆன ஆறை
சண்டைன்னா சட்டை கிழியதானே
செய்யும்
வாய கொடுத்து
வம்பை விலை கொடுத்து..
ச்சே இந்த இரவு ஏன் வருகிறது
பகலில் பந்தா காட்டும் மனம்
இரவில் இளகிவிடுகிறதே
கணுக்கால் தெரிந்தால் போதுமே
நாக்கு வெற்றிலை பாக்கு கேட்குதே
மிஸ்டர் இறைவன்
இது எல்லாம் என்ன கூத்து
கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரியா
ஆண்பாவம் சும்மாவிடுமா
சரி இன்னுமா கோபம் குடியிருக்கும்
அது எப்பவோ காலி செய்து இருக்கும்
மைசூர் பாக்கை ஜாடியில் பார்த்த பிறகு
சுவைக்காமல் இருக்க முடியுமா
ஜாங்கிரியை பார்த்த பின்
கடித்து திங்காமல் இருக்க தான் முடியுமா
மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரனை அதெல்லாம்
கிலோ எவ்வளவு
அதையெலாம் பழைய பேப்பர்காரன் கிட்ட
போட்டு பல நாளாச்சு
காரியத்தில் கண் வைய்யடா
தாண்டவக் கோனே
ச்சே எவ்வளவு ஆழகா
அனந்த சயணத்தில்
இவள் தேவதை கூட்டத்து தலைவியோ
அந்த ஐஸ்வரியாராய்யோட தங்கையோ
பூரி கட்டை வேறு
அடிக்கடி நினைவுக்கு வர
குளிரின் நடுக்கமா
பயத்தால் விளைந்த நடுக்கமா
உரிமை இருக்கு இல்ல
சும்மாவா அவள் புருஷன்
ஊடலுக்கு பின் கூடல்
கவிஞர்களே அசால்டா
எழுதிடிறீங்க
ஆனா நிஜத்துல
பாக்கரா...
பாத்துட்டா...
அசடு
லிட்டர் கணக்கில் வழிய
ஒரே நொடியில்
கண்களால்
சினம் தனிந்து
காதல் கனிந்து
காமம் அணிந்து
பிரம்மா... பிரம்மா
ஒரு நொடியில்
ஓராயிரம் பாவங்கள்
வெள்ளை கொடி
இமைகளால் பறக்க விட்டாள்
உதட்டோர சிரிப்பில்
பச்சை சிக்னல்
பளீர் என மின்ன
பெண்மையே உன்னை
வணங்குகிறேன்
விரதம் முடிக்க போகிறேனே
போர்வைக்கு பதில்..
மைசூர் பாக்குக்கு பதில்..
ஜாங்கிரிக்கு பதில்..
குளிராவது சுண்டக்காவது
கோதாவில்
இறங்க வேண்டியது தான்
பாக்கி
கவிஞரே
நீர் பலே ஆள் தான்
ராத்திரிகள் வந்துவிட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்
உண்மை தான்
ஆனா
நான் இராமன்
பாருங்கப்பா நான் இராமன்
நானும் காட்டுக்கு போறேன்
நானும் காட்டுக்கு போறேன்
- பாலு