எள்ளோடு தண்ணீரை

அரசு ஊழியர்கள் ஊதியத்தில்
ஆரோக்கியம் காக்க தொகையை பிடித்தம்
செய்வது அரசின் கொள்கையாம்

அப்பணமோ ஊழியர்களுக்கு உகந்த
நேரத்தில் கைக்கு கிடைக்கா
வகையில் காப்பீட்டு நிறுவனங்கள்

திட்டமிட்ட சட்டங்களை வட்டமிட்டுள்ளன
ஆயுளுக்கும் அப்பணம் அரவணைக்காத
வகையிலே அரசின் கொள்கைகளும்

வேண்டாம் எனக்கு அரசின் ஆயும் திட்டம்
என்றே விலகினால் விலாவில் அடித்து
வீம்புக்கென பிடிக்கின்றன அப்பணத்தை

ஆபத்திற்கு உதவாத பிள்ளையென
அரசு சம்பளத்தில் பிடிக்கும் ஆரோக்கிய பணம்
எள்ளோடு தண்ணீரை விட்டதைப் போலவே அது.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Jul-21, 9:27 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 41

மேலே