முகக்கவசம்
முகக்கவசம்
அணிய தயங்கும்
மனிதனே
ஒரு நிமிடம் நில்லுங்கள்
சொல்வதை கேளுங்கள்...!!
கொரோனா
நோயாளியின்
உயிரை காக்க
தங்கள் உயிரை
பணயம் வைத்து
மருத்துவமனையில்
கவச உடைகளை அணிந்து
பணிபுரியும்
மருத்துவர்கள் செவிலியர்கள்
தங்களின்
தவித்த வாய்க்கு
தண்ணீர் குடிக்கவும்
இயற்கை உபாதைக்கு
செல்லவும்
பலமுறை யோசனை
செய்யும்
அந்த நடமாடும்
தெய்வங்களை
நினைத்துப்பார்...!!
முகக்கவசம்
உன் உயிர் கவசம்
உன் வீட்டையும்
நாட்டையும்
காக்கும் கவசம்.
என்பதை மறவாதே...!!
--கோவை சுபா