ஞானம் பிறக்குது
நான்கு சுவற்றுக்குள்
சாமியார் என்ற
போர்வையில்
அமர்ந்துக்கொண்டு ..!!
போலியாக போதனைகளை
போதித்து மக்களை ஏமாற்றி
பெண்களிடம் சில்மிஷங்கள்
பல செய்து மகிழும்
"போலி சாமியார்கள்"..!!
புகாரில் சிக்கிக்கொண்ட பிறகு
செய்த பாவங்களை நினைத்து
உண்மையில் ஞானம் பெறுவது
"சிறைசாலை " என்னும்
நான்கு சுவற்றுக்குள் தான் ..!!
--கோவை சுபா