சுதந்திர காற்று
காலத்தின் கோலத்தை
நினைத்தால் வருத்தமாக
இருக்கின்றது மனிதா ..!!
"கொரோனாவின்"
கொடுங்கோல் ஆட்சியில்
எதிர்த்து பேசமுடியாமல்
சுதந்திர பூமியில்
அடிமையாக
வாழ்கின்றோம் ..!!
சுதந்திர பூமியில்
மனிதர்கள் கூட்டமாக
கூடுவதற்கு தடை ..!!
மூச்சு காற்றையும்
சுதந்திரமாக
சுவாசிக்க முடியாமல்
முகக்கவசம் அணிந்து
சுவாசிக்கும் நிலைமை ..!!
தவறுகள் செய்யாத
மனிதனுக்கும்
விசாரணை ஏதுமில்லாமல்
வீட்டுக்குள்
"சிறை தண்டனை"..!!
மனிதனே கவலை இல்லாமல்
உலகத்தை சுற்றி வருவதற்கும்
இந்த அடிமை வாழ்க்கை
ஒழிவதற்கும்...!!
மீண்டும் சுதந்திரம் என்பதும்
எல்லாமே மனிதா
உன் கையில்தான் இருக்கு ,,!!
--கோவை சுபா