மருத்துவர்கள்

தெய்வமே ! என்றார் அன்று
... தேவனே ! என்றார் நன்று !
மெய்யதைச் சொல்வா ரென்றே
... மேனியைத் திறந்தார் காட்ட !
செய்வதைக் கண்டு நோயை
...செப்பியே பகர்ந்தார் நன்றாய் !
பொய்யிலா மக்கள் கூட்டம்
...போய்வர புகழு மாச்சே !கருவிகள் பலவும் வந்து
... கற்பனை மிகுந்து போச்சே !
துருவிநீ கேள்வி கேட்டால்
... துயருறும் கால மாச்சே !
உருவிலே தெய்வம் கண்ட
...ஊர்புகழ் மாறிப் போச்சே !
மருத்துவர் பெயரைச் சொன்னால்
... மதிப்பதும் குறைந்தே போச்சே !


படிப்பிலே ஐந்து ஆண்டாய்
... பாடமும் படித்த கூட்டம் !
துடிப்பிலே எதுவு மின்றி
... துன்பமாய் அலையு திங்கே !
அடிக்கவே உற்றார் கொண்டு
... ஆளையும் அடித்து வீழ்த்த
வடிக்குதே கண்ணீர் விட்டு
...வாடுதே நாட்டில் இன்றோ.


(மருத்துவர்கள் மீது
தாக்குதல் நாளுக்கு நாள்
பெருகி வரும் இந்த காலம் ...வருத்தப்படக் கூடியதே).

மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : PASALI (1-Jul-21, 4:39 pm)
சேர்த்தது : PASALI
Tanglish : marutthuvargal
பார்வை : 107

மேலே