சேமிப்பு
கையில் காசிருந்தால் ...
இருப்பவன்
அஞ்சுகிறான் ...
இருப்பதைப்
பாதுகாக்க...
என்ன ஒரு
திட்டம் என்றே?...
வங்கியில்
போட்டு வைத்தால் ...
வட்டியில் மிதக்கலாம்...
வீட்டிலே பதுக்கிவைத்தால் ...
பார்த்துப் பார்த்து மகிழலாம் ...
சேமிப்பில்
போட்டு வைத்தால் ...
சந்ததியும் எடுக்கலாம்...
நிலத்தில் போட்டு
வைத்தால் ...
நினைத்த போது
விற்கலாம்...
சுய வட்டிக்கு விட்டால்
முதலாளியும் ஆகலாம் ...
என்றெல்லாம்
கற்பனை செய்து...
கடைசியில்
சூதிலே விட்டான்...
இரட்டையாய்
வளருமென்று.