சிரிப்பூ
மனிதா!
உன் முகமே
ஒரு மலராகும் ...
மகிழ்ச்சியில் மலர்கிறது ...
கோபத்தில் சிவக்கிறது ...
வருத்தத்தில் வாடுகிறது ...
அந்த மலருக்குள்ளும்
மற்றொரு மலர் இருக்கிறது...
அதுவே ..."சிரிப் பூ".
அதை ...
அகலக் காட்டுவதை விட ...
புன்சிரிப்பால் ...
குறைத்தே காட்டி
பழகிக் கொள்...
முகம்...என்றும்
மலர்ந்தே இருக்கும்.