திங்களாய் நீ
கொட்டும் அருவியில்
நீராடும் இளஞ்சூரியன்
சலசலத்து வெள்ளி
ஓடைகள் சேதி சொல்ல
கண்விழிக்கும் காலை
காண விரைந்தோடும்
பறவைகள் பட்டாம்பூச்சிகள்
குதூகலித்தது கொண்டாடும்
குயிலினங்கள் மயிலினங்கள்
விழாக்கோலம் பூணும் இயற்கை - என
என் நெஞ்சமும் மகிழுதடி
சிந்தையில் திங்களாய்
நீ உதிக்கும் வேளை!