அர்த்தம் விளங்கா பென் ண்

அர்த்தம் விளங்கா பென்( ண்)!!!

கரும்பலகையில் எழுதும் ஆசிரியரின் கைகளை பார்த்து கொண்டிருந்தது அனைவரின் கண்கள்,
அந்த வகுப்பறையில்...

ஆனால் அந்த நான்கு கண்கள் மட்டும், கற்பனை எனும் கனவில் பயணித்து கொண்டிருந்தது...
அவர்கள் கடற்கரையிலோ கானகத்திலோ உலாவி இருக்கலாம்...

இரண்டு வருடங்களில் அவனும் அவளும் இயல்பாய் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.,
அந்த கண்கள் பேசும் உறவு நட்பா, காதலா, பாலின ஈர்ப்பா என எவரும் அறியவில்லை, அவர்கள் உட்பட...

இறுதி தேர்வு முடிந்த நாள், அவனும் அவளும் சந்தித்தனர்...
அவர்கள் பேச நினைக்கவில்லை, அவள் ஒரு பென் எடுத்து அவன் கையில் கொடுத்தாள் ,அவன் சற்றே சிந்தித்த வேளையில் அவள் நகர்ந்தாள் அங்கிருந்து...

இன்றுவரை அந்த அர்த்தம் விளங்கா பென்(ண்)னை நினைத்து அவள் கொடுத்த பென்னை வைத்து தினமும் கவிதை எழுதுகிறேன்...

அவன் எனும் நான்.

எழுதியவர் : (2-Jul-21, 11:53 pm)
சேர்த்தது : vaikundaraj
பார்வை : 41

மேலே