கன்னக்குழிவு ஓவியம் எழுத

சிரித்தனளவள் செவ்விதழ்கள் மெல்லவிரிய
புன்னகைமுத் துப்பல்வரி சைபளிச்சிட
கன்னத்தினில் குழிவுகளோ வியமெழுத
சின்னவிழிக ளிரண்டும்நீ லத்திலாடிட
மௌனமாய்
பார்த்தாள் விழியால் ஏதோ பேசினாள்
மொழிபெயர்க்க எனக்குத் தெரிய வில்லையே !

---சிந்தடி வஞ்சிப்பா

புன்னகைமுத் துப்பல்வரி சைபளிச்சிட
கன்னத்தினில் குழிவுகளோ வியமெழுத
சின்னவிழிக ளிரண்டும்நீ லத்திலாடிட
மென்மையாய் மௌனமாய் சிரித்தனள்

---இப்போது முச்சீரினால் ஆன வஞ்சியிருத்தம்

புன்னகைமுத் துப்பல்
கன்னத்தில் குழிவு
சின்னவிழிக ளிரண்டு
மென்மையில் ஒருசிரிப்பு

---இரு சீரால் ஆன வஞ்சித்துறை

புன்னகைமுத் துப்பல் பளிச்சிட மாங்கனிக்
கன்னக் குழிவோ வியமெழுத மின்னிடும்
சின்னவிழி கள்நீல வண்ணத்தில் ஆடிட
மென்மையாய் புன்னகைத் தாள் !

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா



புன்னகைமுத் துப்பல் பளிச்சிட மாங்கனிக்
கன்னக் குழிவொரு ஓவியம் - மின்னிடும்
சின்னவிழி கள்நீல வண்ணத்தில் ஆடிட
மென்மையாய் புன்னகைத் தாள் !

-----ஓ வி நேரிசை வெண்பா

யாப்பார்வலர்கள் பயிலலாம்

-

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-21, 10:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே