பயணம்
பயணம்....
வாடாகண்ணு என்று
வாயார அழைத்தவர்..
கருவாட்டுக் கொழம்பு
பிடிக்குமின்னு
கண்தூங்காது காத்திருந்து
வீட்டுப்பக்கம் போறப்ப
சாப்பிடவெச்சு மனம் நெறஞ்சவர்..
வீட்டுல பலகாரம் செஞ்சுப்புட்டா
ஓடோடிச்சென்றுதர
உள்ளங்குளிர்ந்தவர்...
பட்டணத்துல படிக்கிற நீ
என் உசிரு போச்சுதுன்னா
நீ கண்டிப்பா வரணும்கண்ணு என்றவர்..
மறைவுச்செய்தி கேட்டு
தூரங்களைக்கடந்து
ஊர் சென்று சேர்ந்தப்போ..
பாட்டியின் பயணம் முடிந்து
உடலும் மறைந்திருந்ததை
அறியத்தான் முடிந்தது..
- இளங்கதிர்
01.07.2021