உடைந்த மண் சட்டி
சிவப்பு நிற சீருடையை
சின்னதாக அணிந்து கொண்டு
சிங்கப்பூர் ராஜா போல
சிம்மாசனத்தில் வீற்றிருந்தாய்
சில்லரைக்கு உனை வாங்கி
சில நேரத்தில் வீடு வந்தேன்.
பருப்பு ரசம் செய்தளித்து
பாரட்டினை பெற்ற உனை
பத்துமாத குழந்தைப் போல
பத்திரமாய் பார்த்திருந்தும்
பருவமழை வெள்ளம் வந்து
பாலாற்றினை உடைத்தது போல்
பட்டினியாய் பத்து வேளை
நாங்கள் தான் இருந்த போது
பயன்படாமல் இருக்கிறோம் என
பாசத்துடன் உடைந்தாயோ!