உதைக்கத் துணிவோம்

கல்லும் மண்ணும் மதம் பார்ப்பதில்லை
காற்றும் நீரும் மதம் பார்ப்பதில்லை
உண்ணும் உணவிலும் மதம் என்பதில்லை
ஓடும் குருதியிலும் மதம் என்றுமில்லை
மரத்தில் செடியில் அப்பேதம் இல்லை
அருவியில் பனியிலும் அது போல் இல்லை
காட்டில் குகையில் மிருகங்களிடையில்
இயற்கைச் சார்ந்த எவ்விடத்திலும் அப்பேதம் இல்லை
நாட்டை ஆக்கிய மனித பிண்டகள் மட்டும்
மயிரால் உடையால் பலவகை முறையால்
மகத்துவ வாழ்வை மதத்தின் பெயரால்
சிதைத்து அழித்து வாழ்வை ஒழிக்கும்
வழக்கத்திற்கு பெயரை மதம் என்று சொன்னால்
சொல்லும் எவரையும் உதைக்கத் துணிவோம்
பிடித்த முறையில் இறையை வழிபட
எல்லா உயிருக்கும் உள்ளது உரிமை - அதில்
உயர்ந்தது தாழ்ந்தது இல்லை என்பதே உண்மை.
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (4-Jul-21, 9:24 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 58

மேலே